பிரபல நடிகையான சங்கீதா ‛பிதாமகன், உயிர், காளை’ உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து கவனம் பெற்றார். சமீபகாலமாக குணச்சித்ர வேடங்களில் நடிக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் நடிக்கிறார். சங்கீதா, மலையாள படங்களில் பிசியாக இருந்த சமயம், ஒரு விருது விழாவில், பிரபல பின்னணி பாடகர் கிரிஷை சந்தித்தார். இதையடுத்து பாடகர் கிரிஷை காதலித்து 2009ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக இவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்னை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்நிலையில் இன்ஸ்டா தளத்தில் சங்கீதா தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவர் பெயர் கிரிஷ்( “Sangeetha Krish”) என்பதை நீக்கி சங்கீதா ஆக்டர் (“Sangeetha.act”) என மாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை, பிரிய போவதாக செய்தி பரவியது.
சங்கீதாவும் கிரிஷும் இன்னும் இருவரையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்துதான் வருகின்றனர். அது மட்டுமன்றி, இருவரும் ஒன்றாக இருக்கும் தங்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்னும் நீக்கவில்லை. செய்திகள் வைரலானதையடுத்து, நடிகை சங்கீதா கூறியதாவது, அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அந்த செய்தி முற்றிலும் தவறானது. கிரிஷ், திருவண்ணாமலை போய் விட்டு திரும்பி வந்து கொண்டுள்ளார். என்னிடம் பிரேம் கூட இதுபற்றி கேட்டார். அதெல்லாம் இல்லை என கூறினேன். பொதுவாக நான் என் பெயருக்கு பின்னால் என் அப்பாவோ அல்லது கணவர் பெயரை போட விரும்பமாட்டேன் என்று கூறி வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளார்.