ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் நர்சரி சேர்க்கைக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.2.51,000 கட்டணம் வசூலிக்கப்படுவதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
இதுகுறித்து தர்மா பார்ட்டி ஆஃப் இந்தியா நிறுவனர் அனுராதா திவாரி, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “இப்போது, ABCD கற்க மாதத்திற்கு ரூ. 21,000 செலவாகும். இவ்வளவு அபத்தமான அதிக கட்டணத்தை நியாயப்படுத்த இந்த பள்ளிகள் என்ன கற்பிக்கின்றன,” என்று கூறியுள்ளார். பள்ளியின் கட்டணக் கட்டமைப்பின்படி, முன் தொடக்கப்பள்ளி ( pre-primary) I மற்றும் II வகுப்புகளுக்கான கட்டணம் ஆண்டுக்கு ரூ.2,42,700 ஆகும். இதற்கிடையில், 1 மற்றும் 2 வகுப்புகளுக்கான கட்டணம் ஆண்டுக்கு ரூ.2,91,460 ஆகும்.
இதற்கு பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பயனர் ஒருவர், “கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள், உங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்,” என்று கூறியுள்ளார். மற்றொரு பயனர் ஒருவர் “இந்த முழு செயல்முறையும் ஒருவித மோசடியாக மாறிவிட்டது. சில விஷயங்களை திறம்பட ஒழுங்குபடுத்த வேண்டும்,” என்று கூறினார்.
சமீபத்தில், CoinSwitch மற்றும் Lemonn இன் இணை நிறுவனர் ஆஷிஷ் சிங்கால், தொடக்கப்பள்ளிகளுக்கான பள்ளிக் கட்டண உயர்வு தொடர்பான பிரச்சினையைப் பற்றி விவாதித்தார். ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் 10-30% அதிகரித்து வருவதாகவும், நடுத்தர வர்க்க வருமான வளர்ச்சியை விட அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இது இந்தியாவில் நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கான கல்வி மலிவு மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.
Readmore: இன்ஸ்டா பயனர்களுக்கு ஷாக்!. இனி லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு 1,000 ஃபாலோயர்கள் கட்டாயம்!. மெட்டா அதிரடி!