ஷாப்பிங் பில்ல்கள், உணவக (restaurant) ரசீதுகள் மற்றும் ATM ஸ்லிப்புகள் போன்றவற்றில் Bisphenol S (BPS) எனப்படும் ஒரு மிகவும் விஷத்தன்மை வாய்ந்த ரசாயனம் இருக்கக்கூடும். அந்த காகிதங்களை தொடும் போது வெறும் சில விநாடிகளில் தோல் மூலம் உடலுக்குள் உறிஞ்சப்பட்டுவிடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
BPS என்பது ஹார்மோன் சீர்குலைக்கும் ஒரு ரசாயனமாகும், இது ஈஸ்ட்ரோஜனைப் பிரதிபலிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றம், வளர்ச்சி உள்ளிட்ட உடலின் இயல்பான செயல்பாடுகளை சீர்குலைக்கும். இது Bisphenol A (BPA)-வின் குறைவாக அறியப்படும் ரசாயனமாகும். BPS ஹார்மோன் சீர்குலைவு, அறிவாற்றல் சேதம், விந்தணு எண்ணிக்கை குறைதல், மார்பக புற்றுநோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போது, இன்ஸ்டாகிராம், டிக்டாக், X போன்ற சமூக ஊடகங்களில் பரவும் ரசீது தொடர்பான ஆரோக்கிய எச்சரிக்கைகள் பரவி வருகின்றன. “தெர்மல் பேப்பர் ரசீதுகள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன” என்ற விதமாக பல வைரல் புகார்கள் பரவி வருகின்றன. ஒரு ஆய்வின்படி, இந்தக் கூற்றுகள் உண்மையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வில், பிஸ்பெனால் ஏ (BPA) வெளிப்பாடு மார்பகப் புற்றுநோயின் அதிகரித்த நிகழ்வுகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், மை உருவாக உதவும் வகையில் தெர்மல் பேப்பர் ரசீதுகளில் இந்த இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. சமீபத்தில், சுற்றுச்சூழல் சுகாதார மையம் (CEH) அமெரிக்காவில் உள்ள சுமார் 50 முக்கிய சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கு ரசாயன பாதுகாப்பு மீறல் குறித்த நோட்டீசுகளை அனுப்பியுள்ளது.
CEH அமைப்பு, Burger King, Chanel, Dollar General உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கு
அவர்கள் வழங்கும் தெர்மல் ரசீதுகளில் “Bisphenol S (BPS)” என்ற ஹார்மோனை சீர்குலைக்கும் ரசாயனம் பாதுகாப்பு வரம்புக்கு அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. BPS (Bisphenol S) சேர்க்கப்பட்ட தெர்மல் ரசீதுகளை தொடுவது, சில நொடிகளில் தோல் மூலம் உடலுக்குள் உறிஞ்சுவதற்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இத்தகைய ரசீதுகளை பயன்படுத்தும் நிறுவனங்கள், தெளிவான எச்சரிக்கையை (clear warning) தங்கள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வழங்க வேண்டும் என்று நிபந்தனை கொடுக்கப்பட்டுள்ளது.
NYU லாங்கோனில் குழந்தை மருத்துவப் பேராசிரியரும் சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சியாளருமான ஆராய்ச்சியாளர் டாக்டர் லியோனார்டோ ட்ராசாண்டே Business Insider ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “விஷப்பொருட்கள் எதிர்பாராத இடங்களில் நம்மைச் சுற்றி ஊடுருவுகின்றன” என்றார். “நாம் ‘தெர்மல் பேப்பர் ரசீதுகளை’ பிளாஸ்டிக் அல்ல என நினைக்கிறோம். ஆனால், அதன் மேல் இருக்கும் அந்த பளபளப்பான பூச்சு என்பது ஒரு பாலிமர் (polymer). அதாவது பிளாஸ்டிக்கின் ஒரு வடிவமே!” என்று குறிப்பிட்டார்.
பிஸ்ஃபீனோல் (Bisphenol) என்பது பல்வேறு நுகர்வோர் பயன்பாட்டு பொருட்களான, உணவு பேக்கேஜிங், விளையாட்டு பொம்மைகள், சமையல் பாத்திரங்கள், துணிகள் உள்ளிட்டவைகளில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு வகை ரசாயனக் குழு ஆகும். . பல நிறுவனங்கள் BPA பயன்பாட்டை கைவிட்டு, BPA இல்லாத பொருட்களால் அதை மாற்றியுள்ளன. இருப்பினும், BPA க்கு மாற்றாக பெரும்பாலும் பயன்படுத்தப்படும் BPS நச்சுத்தன்மை வாய்ந்தது என்று சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
சிக்கலை எவ்வாறு குறைப்பது? அச்சிடப்பட்ட ரசீதுகளுக்கு பதிலாக டிஜிட்டல் ரசீதுகளைத் தேர்வுசெய்யவும். கடை ஊழியர்கள் ரசீதுகளைக் கையாளும் போது கையுறைகளை அணிய வேண்டும், ஆல்கஹால் அடிப்படையிலான ஹேண்ட் சானிடைசர்களை ரசீது கையாளும் முன் தவிர்க்க வேண்டும் மேலும், பாதுகாப்பான மாற்று வழிகளுக்காகவும், BPS இல்லாத ரசீது காகிதத்தைப் பயன்படுத்த நிறுவனங்களை வலியுறுத்தவேண்டும்
Readmore: பிரபல நடிகர் உடல் நலக்குறைவால் காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்…