நடப்பாண்டு 2025 ஆம் ஆண்டிற்குள்ளாகவே, குறிப்பாக பணக்கார வீடுகளில், பாலியல் தேவைகளுக்காக பெண்கள் ஆண்களை விட ரோபோக்களை விரும்பும் நிலை ஏற்படும் என்று Futurologist டாக்டர் இயன் பியர்சன் கணித்துள்ளார்.
பிரிட்டிஷ் நாளிதழான ‘தி சன்’ அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெண்கள் ரோபோட்களை காதலிக்கவும் வாய்ப்புள்ளது என்றும் பெண்கள் மத்தியில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதை விட ரோபோவுடன் செக்ஸ் கொள்வது மிகவும் பிரபலமடையும் என்றும் பியர்சன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பலர் அவரது கணிப்புகளை காமெடியாய் நினைத்து நிராகரித்து, சிரிப்புடன் புறக்கணித்தாலும், கவர்ச்சியான பொம்மைகள், செக்ஸ் பொம்மைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு ஆகியவற்றின் பயன்பாடு மற்றும் சமூக ஏற்றுக்கொள்ளலின் அதிகரிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவது, அவரது கணிப்புகள் உண்மையாக மாறக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
மேலும், இதில் அதிர்ச்சிகரமான விஷியம் என்னவென்றால், சாதாரண செக்ஸை விட ரோபோ செக்ஸ் மிகவும் பொதுவானதாக இருக்கும் என்றும், ரோபோட்களுடனான பாலியல் உறவு, சாதாரண மனிதர்கள் இடையே நடைபெறும் பாலியல் உறவை தவிர்த்து அதைவிட அதிகமாகவும் பரவலாகவும் காணப்படும். “தொடக்கத்தில் பலர் ரோபோட்களுடன் உள்ள பாலியல் உறவுகள் குறித்து தயக்கத்துடன் இருப்பார்கள்.
ஆனால் காலப்போக்கில், அவர்கள் அந்த ரோபோட்களைப் பழகத் தொடங்கும் போது, உணர்வுப்பூர்வமான உறவுகள் உருவாகும். அந்தப் பீதியும், வெறுப்பும் மெல்ல மாயமாகி விடும்,” என்று பியர்சன் தனது அறிக்கையில் எழுதியுள்ளார். அதாவது, 2030 ஆம் ஆண்டுக்குள், மெய்நிகர் யதார்த்தத்தில் (Virtual Reality) பாலியல் உறவுகள் சாதாரணமாக பரவலாகிவிடும் என்று பியர்சன் கணித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Readmore: கருட புராணத்தின் படி.. இந்த ஐந்து செயல்களும் கடுமையான பாவங்களுக்குச் சமம்..!!