மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.. சிதம்பரத்தில் இருந்து வேளங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த இரு சக்கரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.. மேலும் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தது..
அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பைக்கில் சென்ற சங்கர் என்பவர், துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த சரண்யா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Read More : திடீர் திருப்பம்..!! பேராசிரியை கொடுத்த புகார்..!! இறந்துபோன அஜித்குமார் மீது சிபிஐ வழக்குப்பதிவு..!!