2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அதிரடியாக தெரிவித்துள்ள அவர், அதே சமயம் கூட்டணி குறித்த யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள தினகரன், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே (NDA) தனது பயணம் தொடரும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
அதிமுக மற்றும் அமமுக இடையே கடந்த காலங்களில் நிலவி வந்த கசப்பான மோதல்களை வெறும் “குடும்பச் சண்டை” என்று கூறிய அவர், தற்போது பாஜகவுக்கு தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தல் அரசியலில் இருந்து தான் ஒதுங்கி நிற்பதற்கு காரணத்தையும் அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக கட்சிக்காகத் தங்களது உழைப்பைச் சிந்திய தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சட்டமன்றத்திற்குள் நுழைய செய்வதும், அவர்களை அதிகாரமிக்க அமைச்சர்களாக பார்ப்பதுமே தனது தற்போதைய இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.
Read More : உங்கள் வேண்டுதல் அப்படியே நிறைவேற வேண்டுமா..? முதலில் இறைவனிடம் இப்படி கேளுங்க..!! கண்டிப்பா நடக்கும்..!!



