இந்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் ஜல் சக்தி அமைச்சகங்களால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஸ்வச் சர்வேக்ஷன் (Swachh Survekshan) என்ற தூய்மை ஆய்வு அறிக்கை, நகரங்கள் மற்றும் கிராமங்களின் சுகாதார நிலையை அளவிடுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த ஆய்வானது நகரங்களுக்கு இடையே தூய்மைக்கான போட்டியை உருவாக்கி, தூய்மையான இந்தியாவை நோக்கிய நகர்வை ஊக்குவிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. சுகாதார வசதிகள், கழிவு மேலாண்மை, பொது இடங்களின் தூய்மை மற்றும் குடிமக்களின் ஈடுபாடு போன்ற பல முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் இந்த செயல்திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது.
ஸ்வச் சர்வேக்ஷன் 2025 ஆம் ஆண்டிற்கான ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிற்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டுக்கான இந்தியாவின் அசுத்தமான 10 நகரங்களின் பட்டியலில், தமிழ்நாட்டின் மதுரை மாநகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், சென்னை 3-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த அசுத்தமான நகரங்கள் பட்டியலில் பஞ்சாபின் லூதியானா, ஜார்க்கண்டின் ராஞ்சி, கர்நாடகாவின் பெங்களூரு, மகாராஷ்டிராவின் மும்பை, ஸ்ரீநகர் மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டின் இரண்டு பெருநகரங்களான மதுரை மற்றும் சென்னை முதல் 10 இடங்களில் வந்திருப்பது, நகர்ப்புற சுகாதாரத்தில் உள்ள சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
Read More : ஐப்பசி பௌர்ணமி..!! முருகப்பெருமானுக்கு இதை படைத்து வழிபடுங்க..!! வீட்டில் செல்வம் பெருகும்..!!



