பீஹார் சட்டசபைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் போது, லகிசரை தொகுதியில் பதற்றம் நிலவியது.. அந்தத் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் மற்றும் பாஜக வேட்பாளர் விஜய் குமார் சின்ஹா காரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.. இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
வாக்குச் சாவடியில் நடந்த தாக்குதலை “துரதிர்ஷ்டவசமானது” என்று சின்ஹா தெரிவித்தார். மேலும் “ஒவ்வொருவருக்கும் அமைதியாக வாக்களிக்கும் உரிமை உள்ளது. என் வாக்குப் பிரதிநிதியை ஏன் வெளியே அனுப்பினர்? இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.” என்று கூறினார்..
அந்தப் பகுதியில் ஆர்.ஜே.டி. ஆதரவாளர்கள் சின்ஹாவின் காரின் மீது காலணிகளை வீசி தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.. இதனால் அவர் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு நிலைமையை சமாளித்தனர்.
ஆர்.ஜே.டி. ஆதரவாளர்களே தன் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டினார். “நான் கிராமத்திலேயே இருக்கிறேன். கூட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சிறப்பு படையினரை அனுப்புங்கள். நான் இங்கே அமர்ந்து போராட்டம் நடத்துவேன். இவர்கள் ஆர்.ஜே.டி. குண்டர்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே இப்படிச் செய்கிறார்கள். காலை 6.30-மணிக்கே என் பிரதிநிதியை மிரட்டி அனுப்பிவிட்டார்கள். வாக்காளர்களையும் தடுக்கிறார்கள்,” என்றும் கூறினார்.
“என் தொகுதியில் உள்ள 404, 405 வாக்குச்சாவடிகளில் திணிக்கப்பட்ட வன்முறை நடந்துள்ளது. மக்கள் உண்மையான உரிமையாளர். நாங்கள் மக்களின் வாக்கு பாதுகாக்கப் போராடுவோம்,” என்றும் அவர் கூறினார்…
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை
இச்சம்பவத்தை தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. மாநில காவல் தலைவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
லகிசரை தொகுதி போட்டி
2010 முதல் லகிசரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜய் சின்ஹா, இம்முறை தனது 4-வது முறை இந்த தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். புமிஹார் சமூகத்தின் முக்கியத் தலைவரான அவர், லகிசரை மாவட்டத்தில் ஒரு சக்திவாய்ந்த அரசியல் முகமாகக் கருதப்படுகிறார்.
அவருக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் அமரேஷ் குமார் மற்றும் ஜன ஸுராஜ் கட்சியின் சுராஜ் குமார் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் எதிர்க்கட்சித் தீவிர உணர்வை பயன்படுத்தி வேலைவாய்ப்பு, சுரங்கச் செயல்பாடுகள் போன்ற உள்ளூர் பிரச்சனைகளை மையப்படுத்தியுள்ளனர்.
Read More : காதலனை கடைக்கு அனுப்பி வைத்துவிட்டு இளம்பெண்ணை போலீஸ் பூத்துக்குள் வைத்து..!! காவலரின் அதிர்ச்சி செயல்..!!



