கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலான்யவு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குழு தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு பின் இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், திமுக அரசை விமர்சித்து பேசியிருந்தார்.. மேலும் தனது வீடியோவில் அவர் வருத்தம் தெரிவிக்காததும், மன்னிப்பு கேட்காததும் அதிருப்தியை ஏற்படுத்தியது.. அதுமட்டுமின்றி “ சி.எம்.சார் என்ன பழிவாங்கணும்னா என்ன எது வேண்டுமானாலும் செய்யுங்க.. தொண்டர்கள் மீது கை வைக்காதீங்க..” என்று கூறியிருந்தார்.. விஜய்யின் இந்த பேச்சு சினிமா டயலாக் மாதிரி இருப்பதாக பலரும் விமர்சித்திருந்தனர்..
கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு நேற்று தான் விஜய்யின் ஆலோசனையின் பேரில் தவெக நிர்வாகிகள் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறிவருகின்றனர்.. அங்கு அந்த நிர்வாகிகளுக்கு விஜய் வீடியோ கால் செய்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் வீடியோ காலில் இன்று ஆறுதல் கூறினார்.. ” உங்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.. உங்களில் ஒருவனாக இருப்பேன்.. என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன்..” என்று விஜய் பேசினார் என்ற் தகவல்கள் தெரிவிக்கின்றன..
இந்த நிலையில் கரூர் செல்லவிருக்கும் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தவெக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் ஆறுதல் கூற உள்ளதாகவும், தவெக சார்பில் அறிவித்த நிவாரண தொகையை அவர் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.. இதற்காக கரூர் செல்லவிருக்கும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. காவல்துறை அனுமதியும் பாதுகாப்பும் வழங்கும் பட்சத்தில் விஜய் விரைவில் கரூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நக்கீரன் கோபால் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.. தனது யூடியூப் சேனலில் பேசிய அவர் “ ஜனநாயகன் படத்திற்கான சினிமா ஷூட் தான்.. அந்த படத்தில் வரும் இரவு நேர காட்சிக்காக நாமக்கல்லில் இருந்தே கூட்டத்தை கரூருக்கு அழைத்து வந்துள்ளனர்.. ஹை குவாலிட்டி திறன் கொண்ட 63 ட்ரோன் கேமராக்கள் கரூரில் பறந்துள்ளது.
விஜய்யின் பிரச்சார பேருந்தில் பவர்ஃபுல் கேமரா இருக்கு.. இது எல்லாமே சரி.. மக்களை காவு வாங்கி, தனது திரைப்படத்திற்கும் அரசியல் வாழ்க்கைக்கும் பயன்படுத்தி உள்ளார்.. அதற்காக 41 பேரை காவு கொடுத்த விஷயம் தான்.. ஜனநாயகன் படத்திற்காக நடத்தப்பட்ட ஷூட்டிங் தான் இது என்று வேறொரு வீட்டில் கூறிய உடன் இன்று எனது வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
கரூர் கூட்டத்தில் கும்பலாக வந்து அடித்தனர், கத்தியை வைத்து கிழித்தனர் என்று அவர்கள் கூறுகின்றனர்.. அதற்கெல்லாம் ஒரு ஆதாரம் கிடையாது.. அதற்கு ஆதாரம் கேட்டால். ட்ரோன் கேமராவில் சில விஷயங்கள் பதிவாகவில்லை என்று அக்கட்சியினர் கூறி வருகிறனர்.
ஜனநாயகன் என்ற படத்திற்கான ஷூட்டிக்கை ஒரு காசு செலவில்லாம்ல், 41 பிணம் மேல் நின்று நடத்தி உள்ளனர்.. இப்படி ஒரு விஷயத்தை போட்டுடைத்ததால் என் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.. இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம்..” என்று தெரிவித்தார்..
Read More : கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!