கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது செந்தில் பாலாஜி மீது வைத்த தவெகவினர் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதிலளித்தார்.. குறிப்பாக கூட்ட நெரிசல் நடந்த உடனே செந்தில் பாலாஜி எப்படி அங்கு சென்றார் என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.. மேலும் “ தவெக கூட்டத்திற்கு வந்தது கட்டுங்கடங்காத கூட்டம் இல்ல.. கட்டுப்பாடற்ற கூட்டம்.. கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த போது நான் கட்சி அலுவலகத்தில் தான் இருந்தேன்.. கட்சி அலுவலகத்தில் இருந்து அமராவதி மருத்துவமனை அருகில் தான் உள்ளது.. அதனால் எனக்கு தகவல் கிடைத்த உடன் உடனடியாக அங்கு சென்றேன். மக்கள் பாதிக்கப்பட்ட போது டிக்கெட் போட்டு சென்னை செல்ல சொல்கிறார்களா என கேள்வி எழுப்பினார்..
தவறுக்கு பொறுப்பேற்காமல் அரசை குற்றம்சாட்டுவது சரியான விஷயம் அல்ல.. இந்த மடைமாற்றும் செயலை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. தவெக தலைவர் விஜய் உடன் வந்தவர்களும் கூட்டத்திற்குள் வந்ததே நெரிசலுக்கு காரணம்.. தவெக தலைவர் என்னை பற்றி பேசிய போது தான் செருப்பு வீசப்பட்டது என்பது பொய்யானது.. வெறும் 10 நிமிடங்கள் பேசிவிட்டு இப்படி ஒரு பேரிழப்பை உருவாக்கி விட்டனர்.. எங்கள் தலைவர் வரும் போது 2-ம் கட்ட தலைவர்கள் கூட்டத்தை வழிநடத்தி செல்வார்கள்.. ஆனால் விஜய்யின் வாகனத்திற்கு முன்பு 2-ம் கட்ட தலைவர்கள் வழிநடத்தி சென்றார்களா? தவெகவினர் கூட்டத்தை வழிநடத்தி செல்லவில்லை.. அரசு தன் கடமையை சரியாக செய்தது.. ஆனால் அரசியல் கட்சி தனது கடமையை சரியாக செய்யவில்லை..
கூட்ட நெரிசல் காரணமாக தவெக தொண்டர்கள் ஜெனரேட்டர் அறைக்கு சென்றனர்.. அதனால் ஜெனரேட்டர் அணைக்கப்பட்டது.. ஜெனரேட்டர் அணைக்கப்பட்ட நேரத்தில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டு தான் இருந்தன.. விஜய்யின் கவனத்தை ஈர்க்கவே சிலர் செருப்பை வீசினர்.. அதன்பின்னர் அவர்களுக்கு தன்ணீர் பாட்டில் கொடுக்கப்பட்டது..