ஆன்மீகம் என்றாலே நம் மனதில் பல கேள்விகள் எழும். இதெல்லாம் செய்யணுமா..? இதற்கு என்ன அர்த்தம்..? என்று பலவிதமான சந்தேகங்கள் எழும். அந்த சந்தேகங்கள் வழியாகவே நாம் தெளிவையும், ஆன்மீகப் புரிதலையும் பெறுகிறோம். அதனை அடைவதற்கான ஆரம்ப கட்டமாக சில பொதுவாக எழும் கேள்விகளும், அவற்றுக்கான காரணங்கள் குறித்தும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
விளக்கேற்றும் போது பூ சாத்துவது அவசியமா?
சிலர், சுவாமி படத்திற்கு பூவில்லாமல் வழிபடலாமா எனக் கேட்பர். ஆன்மீக பார்வையில், காலை நேரத்தில் விளக்கேற்றி, பூ சாத்தி வழிபடுவது மிகவும் சிறந்தது. அது ஒரு தூய்மையையும், பக்தி பூர்வமான சூழலையும் உருவாக்குகிறது. ஆனால் மாலை நேரத்தில், வெறும் விளக்கேற்றி வழிபட்டால் போதும். பூ கட்டாயமில்லை.
செவ்வாயும்.. வெள்ளியும்..!!
வீட்டில் ஒட்டடை அடிப்பதை பற்றியும் ஒருவகை நம்பிக்கை உள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பொருளாதாரம் வளரக் கூடிய சக்திகள் உச்சமாக இருப்பதாக நம்பப்படுகிறது. அதனால் அந்த நாட்களில் வீடு முழுவதும் ஒட்டடைகள் ஒழுக்கத்தின் குறைவாகவே பார்க்கப்படுகின்றன. அவசியமாகவே அடிக்க வேண்டுமானால், அந்த நாளின் தொடக்கத்திலேயே (அதாவது அதிகாலை அல்லது காலை நேரத்தில்) அடித்து விட்டுச் சுத்தமாக வைத்திருக்கலாம்.
வழிபாட்டில் கண்ணை மூடலாமா..?
மற்றொரு பரவலாகக் கேட்கப்படும் கேள்வி வழிபடும் போது கண்ணை மூடலாமா? திருவுருவம் (சுவாமி படம், சிலை) கண் முன்னே இருக்கும்போது, அந்த உருவத்தை முழுமையாக உணர கண்ணைத் திறந்தே வழிபட வேண்டும். ஆனால், சந்நிதி இல்லாத இடங்களில், மனதில் கடவுளின் திருவுருவத்தை நினைவுபடுத்திக் கொண்டு, அமைதியாக கண்ணை மூடியும் வழிபடலாம்.
மாலை நேரத்தில் ஏன் சாப்பிடக்கூடாது..?
மாலை நேரம் என்பது சூரியன் மறையும் சந்தியாஹர்த்தியான காலம். இந்த நேரம் ஆன்மீக ரீதியாக மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அந்த நேரத்தில் நாம் சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்ற உலகியல் செயற்பாடுகளை தவிர்த்து, மனதை ஒருமைப்படுத்தி கடவுள் வழிபாட்டில் ஈடுபட வேண்டும். அப்போது நாம் வீட்டில் விளக்கேற்றி, மகாலட்சுமியை வரவேற்கும் நேரம் எனச் சொல்லப்படுகிறது.
Read More : தப்பித் தவறி இந்த வாஸ்துப்படி மட்டும் வீடு கட்டாதீங்க..!! நினைத்துப் பார்க்க முடியாத சிக்கல்கள் வரும்..!!