கரூர் சம்பவம் போன்ற இனி எந்த சம்பவங்களும் நிகழக்கூடாது என்றும், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதி சில காட்டமான கருத்துகளை தெரிவித்தார்.. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோக்களை பார்க்கும் போது வேதனையளக்கிறது..
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களா? விஜய்யின் பிரச்சார வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா? இதுவரை 2 பேரை மட்டும் தான் கைது செய்திருக்கிறீர்களா? விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? நீதிமன்றம் எல்லாவற்றையும் கண் மூடி வேடிக்கை பார்க்காது.. கட்டுப்படுத்தப்படாத கலவரம் போல் இது நடந்துள்ளது.. சம்பவம் தொடர்பக வழக்குப்பதிவு செய்ய என்ன தடை? புகார் இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.. சம்பவம் நடந்த உடன் தவெகவினர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்..” என்று தெரிவித்தனர்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் அரசு யாரையும் பாதுகாக்கவில்லை என்று அரசு தரப்பு தெரிவித்தது. மேலும் விஜய்யின் வாகனத்தில் உள்ள சிசிடிடி காட்சிகளை தர வேண்டும் என்றும் அரசு கோரிக்கை விடுத்தது.