ஸ்ருதி சொன்ன ஐடியா.. ரோகிணியை மட்டம் தட்டி மீனாவை பாராட்டும் விஜயா..! சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..

siragadika asai

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில் மனோஜ், ரோகிணி இருவரும் ஆன்லைனில் பிசினஸ் ஆரம்பிப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அதனைக்கேட்டு ஸ்ருதியிடம் பூ வியாபாரமும் இந்த மாதிரி ஆன்லைன்ல பண்ணலாமா என முத்து கேட்கிறான். அதற்கு அவளும் அதெல்லாம் பண்ணலாம். இதுக்கு ஒரு ஆப் இருக்கு.. நா உங்களுக்கு அத ரெடி பண்ணி தர்றேன். அதுல ஆர்டர் வரும்போது நீங்க போய் டெலிவரி பண்ணலாம் எங்கிறாள் ஸ்ருதி.


இதனையடுத்து மீனா புதிய ஆப்பிற்கு எம்எம் பிளவர்ஸ் என பெயர் வைக்கலாம் என்கிறாள். இதை கேட்ட விஜயா, நீ ஏன் தேவ இல்லாத வேலையெல்லாம் பாக்குற ஸ்ருதி. நீ ஹோட்டல் ஆரம்பிச்சு இருக்க. உன்னோட பிசினஸ்ல கவனம் செலுத்து. அதை விட்டுட்டு எதுக்காக இந்த மீனாவுக்குலாம் நீ சப்போர்ட் பண்ணி இருக்க என கேட்கிறாள். அதோடு ரவியை உன் ரெஸ்டாரண்ட்டுக்கு வர வை என்கிறாள்.

அதற்கு ஸ்ருதி, அவன் என் ரெஸ்டாரண்ட் வர்றதும், வராதும் அவனோட இஷ்டம் என சொல்லிவிட்டு உள்ளே போகிறாள். இதனால் விஜயா அப்செட் ஆகிறாள். அப்போது ரவி அங்கு வரவும், அவனை அழைத்து பேசுகிறாள். நீ ஏன் ஸ்ருதியோட ரெஸ்டாரண்ட் போக மாட்ற. அப்படியே நீ நிறைய ஹோட்டல் வைக்கலாம்ல என்கிறாள்.

அதற்கு ரவி, நான் என் சொந்தக்கால்ல நிற்கனும் நினைக்கிறேன்ம்மா. அப்பா என்னை படிக்க வைச்சு இருக்காரு. அதை வைச்சு நான் முன்னேறுவேன் என உறுதியாக சொல்லி விடுகிறாள். அதனை தொடர்ந்து ரூமுக்கு வரும் ரவி, ஸ்ருதியிடம் நீ எதுக்காக என் அம்மா மூலாமா என்னை உன் ரெஸ்டாரண்ட் வர வைக்க முயற்சி பண்ற என கேட்கிறான். அதன் பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஆரம்பிக்கிறது.

மறுநாள் காலையில் ஆன்லைனில் பிசினஸ் ஆரம்பிப்பது பற்றி அண்ணாமலையில் சொல்கிறான் முத்து. உடனே அவர் வாழ்த்து சொல்லி முதல் ஆர்டர் என்னுடையது என்றார். விஜயாவும் மீனாவை பார்த்து பரவாயில்லை இவள் தொடர்ந்து முன்னேறிக்கிட்டு தான் இருக்காள் என சொல்ல, அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். அதே சமயம் ரோகினியையும் விமர்சிக்கிறார். அதற்கு ரோகிணி நானும் என்னோட பீல்ட்ல மேல வருவேன் ஆண்ட்டி என சொல்கிறாள்.

உடனே விஜயா நீ கிழிச்சா என மட்டம் தட்டி பேச தொடங்கிவிட்டார். உடனே ரோகினி, மனோஜ் வாழ்க்கைல நான் வந்த பிறகு தான் பிசினஸ் வைச்சு முன்னேறி இருக்கான் என சொல்கிறாள். அதற்கு விஜயா அந்தப்பணம் இவரோடது. நீ உன் சொந்த பணத்துல கடை வைச்சு கொடுத்த மாதிரி பேசுற என பதிலடி கொடுக்கிறாள். இடையில் அண்ணாமலை புகுந்து சமாதானம் செய்து அனைவரையும் அனுப்பி வைக்கிறான்.

Read more: மகாராஷ்டிரா : 60 நக்சல்களுடன் முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் அதிகாரிகளிடம் சரண்!

English Summary

Shruti’s idea.. Vijaya will praise Meena after criticizing Rohini..! today siragadika aasai episode

Next Post

புதிதாய் தங்கம் வெள்ளி நகைகள் வாங்கும் போது பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருவது ஏன் தெரியுமா..? - பலருக்கு தெரியாத தகவல்..

Tue Oct 14 , 2025
Do you know why when you buy new gold and silver jewelry, it is wrapped in pink paper? - Information that many people don't know..
gold pink paper d84835c47a v jpg 1

You May Like