மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஆக்ஸியம் 4 மிஷன் மூலம் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் ஜூன் 25-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டனர். இந்திய விமானப்படை விமானியும் இஸ்ரோ விண்வெளி வீரருமான சுக்லா, ஆக்ஸியம்-4 மிஷனின் விமானி ஆவார். 1984 இல் ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்திற்கு பின் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையை சுக்லா பெற்றார்.
சுக்லா உடன் ஆக்ஸியம்-4 கமாண்டர் பெக்கி விட்சன் மற்றும் மிஷன் நிபுணர்களான ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் டிபோர் கபு ஆகியோர் ஷுக்லாவுடன் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர்.
சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் சென்ற டிராகன் விண்கலம் ஜூன் 26-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இதையடுத்து சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் 14 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருந்து ஆய்வு மேற்கொண்டனர்… விண்வெளியில் பயிற்கள் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் குறைந்த புவி ஈர்ப்பு விசையில் உடலின் தசைகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. தனக்கு கொடுத்த 7 அறிவியல் ஆய்வுகளையும் சுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக முடித்ததாக இஸ்ரோ ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் இன்று பூமிக்கு புறப்பட்டனர். இதற்காக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ட்ராகன் விண்கலத்திற்கு சென்ற நிலையில் சரியாக இன்று மாலை 4.35 மணியளவில் விண்கலம் தனியாக பிரிக்கப்படும் என்று திட்டமிடப்பட்டது.. ஆனால் இதில் சிறிய தாமதம் ஏற்பட்ட நிலையில், 10 நிமிடங்கள் தாமதமானது..
கடைசி கட்ட பரிசோதனைகள் முழுமையாக ஆய்வு செய்யப்ப்பட்ட பின்னர் சரியாக 4.48 மணியளவில் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. நாளை மதியம் 3 முதல் 4 மணியளவில் கலிஃபோர்னியா மாகாணத்தை ஒட்டிய பசுபிக் பெருங்கடல் அருகே தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Read More : சூடானில் துணை ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 18 பேர் பலி!. 30க்கும் மேற்பட்டோர் காயம்!