’சிம்பு ஒரு டம்மி பீஸ்’..!! ’பத்து தல’ படத்தை பந்தாடிய ப்ளூ சட்டை மாறன்..!! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!!

கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக்காக வெளியாகி உள்ள பத்து தல படத்தை ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல தனது விமர்சனத்தில் பந்தாடி உள்ளார்.


சிம்பு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பத்து தல படம் நல்ல படமாக இருக்கும் என நம்பிப் போய் தியேட்டரில் உட்கார்ந்தால், அந்த படத்தில் கடைசி வரை வெறும் பில்டப் மட்டுமே செய்து ரசிகர்களை ஏமாற்றுகின்றனர். பத்து தல வெத்து தல என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் பந்தாடி உள்ளார். கேஜிஎஃப் படத்தில் மைன்களை வைத்து கதை அமைந்த நிலையில், எல்லா இயக்குநர்களும் மைன்களை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கின்றனர். வாரிசு, தசரா, பத்து தல என எல்லா படங்களிலுமே மைன் ஒரு முக்கிய கருவாகவே மாறி விட்டது என்றும் மைன்களை குண்டு வைத்து தகர்க்க முடியாது ஏற்கனவே குண்டு வைத்து வெடித்துத் தான் அதை உண்டாக்குறாங்க, வேணும்னா மண்ணை அள்ளிப் போட்டு மூடிடலாம். இல்லைன்னா நம்மள மண்ணை அள்ளிப் போட்டு மூடிடுவானுங்க போல என கூறியுள்ளார்.

WhatsApp Image 2023 03 31 at 3.48.17 PM

இந்த படத்தில் கெளதம் மேனன் வில்லன் என்று யாராவது சொன்னால் தான் உண்டு என்பது போல மொக்கை வில்லனாகவே வருகிறார். துணை முதல்வர் என சொல்லிக் கொண்டு வரும் கெளதம் மேனன் கடைசியில் கிளைமேக்ஸில் அடியாட்களை வைத்துக் கொண்டு சிம்புவுடன் மோதும் காட்சிகள் குபீரென சிரிப்பை வரவழைப்பதாக தெரிவித்துள்ளார். மொக்கை வில்லனை போலவே அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாகவே இந்த படத்தில் ஹீரோயின் பிரியா பவானி சங்கர் வந்து போகிறார். அவருக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை என்று சொல்ல முடியாது, வேலையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கன்னடத்தில் இந்த படத்தில் சிவராஜ்குமார் நடித்திருப்பார். அங்கே உள்ள அரசியல் சூழலுக்கும் அவரது மாஸுக்கும் இந்த படம் வொர்க்கவுட் ஆனது. ஆனால், இங்கே சிம்பு யாரு இவரு ஒரு டம்மி பீஸ், இவருக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் வழக்கம் போல தனிப்பட்ட தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. ப்ளூ சட்டை மாறன் நடிகர் சிம்புவை டம்மி பீஸ் என விமர்சித்த நிலையில், கடுப்பான சிம்பு ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை வழக்கம் போல கழுவி ஊற்றி கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

CHELLA

Next Post

இடி மின்னலுடன் பெய்ய காத்திருக்கும் மழை..!! எப்போது..? எங்கெங்கு..? வானிலை அப்டேட்..!!

Fri Mar 31 , 2023
தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை (மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி […]
in rain tamil nadu

You May Like