பாடகி ஆஷா போஸ்லே மரணம்..? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..! – குடும்பத்தினர் விளக்கம்

asha bhosle 87 1200 1

பாடகி ஆஷா போஸ்லே இறந்து விட்டதாக பரவும் தகவல் வதந்தி என அவரது மகன் விளக்கம் கொடுத்துள்ளார்.


பிரபல பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களில் பாடியிருக்கிறார். இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், பதினெட்டு மகாராஷ்டிர மாநில விருதுகள், சிறந்த பின்னணி பாடகிக்கான ஏழு பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்

இந்தியத் திரையுலகின் தலைசிறந்த பாடகிகளில் ஒருவர் ஆஷா போஸ்லே. இவர் 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 12,000-க்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.  தமிழில் ’செண்பகமே.. செண்பகமே’, ’ஓ… பட்டர்பிளை…’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். ஆஷா போஸ்லேக்கு மத்திய அரசு, திரைப்படத் துறையின் உயரிய தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தது.

இதற்கிடையில் இவர் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி ஆஷா போஸ்லே இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்தநிலையில் பாடகி ஆஷா போஸ்லே இறந்து விட்டதாக பரவும் தகவல் வதந்தி என அவரது மகன் ஆனந்த் போஸ்லே விளக்கம் கொடுத்துள்ளார். ஆஷா போஸ்லே மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: காஞ்சிபுரம்: தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை..!!

English Summary

Singer Asha Bhosle’s death..? Malicious information is spreading on the internet..! – Family explains

Next Post

5G-ஐ விடுங்க.. நெட்ஃபிளிக்ஸ் முழுவதையும் வெறும் 1 வினாடியில் டவுன்லோடு செய்யலாம்.. அசத்தும் ஜப்பான்..

Fri Jul 11 , 2025
Japanese researchers have achieved the world's fastest internet speed of 1.02 petabits per second.
686f8a5e37eb0 japan just hit 102 pentabits per second what does that internet speed mean for you 103936508 16x9 1

You May Like