கடந்த மாதம் சிங்கப்பூரில் பிரபல பாடகர் ஜூபீன் கார்க் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தது தொடர்பான விசாரணையில் ஒரு பெரிய திருப்புமுனையாக, அதிகாரிகள் இன்று அவரது உறவினரும் அசாம் காவல்துறை டிஎஸ்பியுமான சந்தீபன் கார்க்கை கைது செய்ததனர்.. சிங்கப்பூரில் நடந்த இந்த சம்பவத்தின் போது, துணை எஸ்பியும் பாடகரின் உறவினருமான சந்தீபன் கார்க் அவருடன் இருந்துள்ளார்.
பாடகரின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் அதிகாரியிடம் கடந்த சில நாட்களில் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது. சிறப்பு டிஜிபி முன்னா பிரசாத் குப்தா இதுகுறித்து பேசிய போது “நாங்கள் சந்தீபன் கார்க்கை கைது செய்துள்ளோம். இப்போது, தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை நாங்கள் செய்து வருகிறோம்,” என்று தெரிவித்தார்.
“எங்கள் குழு அவரை இங்குள்ள நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. நாங்கள் போலீஸ் காவலில் வைக்க கோருவோம்,” என்று மற்றொரு மூத்த அதிகாரி கூறினார்.
இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மற்றவர்கள் வடகிழக்கு இந்திய விழா தலைமை அமைப்பாளர் ஷியாம்கானு மஹந்தா, பாடகரின் மேலாளர் சித்தார்த் சர்மா மற்றும் அவரது இரண்டு இசைக்குழு உறுப்பினர்களான சேகர் ஜோதி கோஸ்வாமி மற்றும் அம்ரித் பிரபா மஹந்தா. இந்த வழக்கு தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட மற்ற நான்கு பேரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர்.
ஜூபீனுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜூபீனின் இசைக்குழு உறுப்பினர் சேகர் ஜோதி கோஸ்வாமி, சிங்கப்பூரில் தனது மேலாளர் சித்தார்த் சர்மா மற்றும் விழா ஏற்பாட்டாளர் ஷியாம்கானு மஹந்தா ஆகியோரால் பாடகர் விஷம் கொடுக்கப்பட்டதாகக் கூறினார். இதையடுத்து கோஸ்வாமி மற்றும் அமிர்தபிரபா மஹந்தாவுடன் சர்மாவும் கைது செய்யப்பட்டு 14 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜூபீனின் மரணத்தை தற்செயலாக நடந்த விபத்தாக சித்தரிக்க ஒரு “சதி வகுக்கப்பட்டது” என்று கோஸ்வாமி காவல்துறையில் தெரிவித்துள்ளார். சர்மா “சந்தேகத்திற்குரிய நடத்தை”யைக் காட்டியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
“ஸ்ரீ சர்மாவும் ஸ்ரீ ஷியாம்கானு மஹந்தாவும் பாதிக்கப்பட்டவருக்கு விஷம் கொடுத்ததாகவும், அவர்களின் சதியை மறைக்க வேண்டுமென்றே ஒரு வெளிநாட்டு இடத்தைத் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் (கோஸ்வாமி) குற்றம் சாட்டினார். படகு வீடியோக்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் ஸ்ரீ சர்மா அவருக்கு அறிவுறுத்தினார்,” என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜுபீன் கார்க்கின் மரணம் மற்றும் சர்ச்சை
52 வயதான பாடகி செப்டம்பர் 19 அன்று சிங்கப்பூரில் கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது இறந்தார். பிரபல பாடகர் செவ்வாய்க்கிழமை முழு அரசு மரியாதையுடன் குவஹாத்தியின் புறநகரில் தகனம் செய்யப்பட்டார். அவரது மரணத்தில் எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
பொதுமக்களின் கோரிக்கை மற்றும் அவரது அகால மரணம் குறித்த விசாரணையில் வெளிப்படைத்தன்மை தேவை ஆகியவற்றின் அடிப்படையில் பாடகரின் மரணம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டது. சிங்கப்பூரில் கடலில் நீந்திக் கொண்டிருந்தபோது மர்மமான முறையில் இறந்த ஜூபீனின் மரணம் குறித்து விசாரிக்க அசாம் அரசு ஒன்பது பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்துள்ளது.