வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை எப்படி சரிபார்ப்பது என்று பார்க்கலாம்..
தமிழ்நாட்டில் SIR பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.. அதன்படி தமிழ்நாட்டில் சுமார் 98 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இருந்து நீக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டில் கடந்த அக்டோரில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6,41,14,587 ஆக இருந்த நிலையில், SIRக்கு பின் வாக்காளர்கள் எண்ணிக்கை 5,43,76,755 ஆக உள்ளது..
சரியான முகவரியில் இருந்தவர்களை தவிர இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் என தமிழ்நாட்டில் மொத்தம் 97, 37,831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன..
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் BLO-க்களை அணுகலாம். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.. இல்லை என்றால் சிறப்பு முகாம்களில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்.. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் இன்று முதல் ஜனவரி 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை எப்படி சரிபார்ப்பது என்று பார்க்கலாம்..
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை எப்படி சரிபார்ப்பது?
Voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
உங்கள் வாக்காளர் அடையாள அட்டை (EPIC) எண்ணை உள்ளிடவும். உங்கள் பெயர், வயது மற்றும் தொகுதி போன்ற தனிப்பட்ட விவரங்களை உள்ளிடலாம்.
பின்னர் தேடல் பட்டனை அழுத்தி உங்கள் வாக்காளர் விவரங்களை காணலாம்.
இதில் உங்கள் பெயர் இருந்தால், வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்..
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்?
இருப்பினும் இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் சம்மந்தப்பட்டவர்கள் ஜனரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம்.
இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்து ஆவணங்களை வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18-ம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.. அதே போல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என்பது கவனிக்கத்தக்கது..
Read More : “திமுகவின் கனவு மண்ணோடு மண்ணாக போனது.. அவர்களின் சதிவலையில் விழவேண்டாம்..” இபிஎஸ் எச்சரிக்கை..!



