பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலாமாக நடைபெற்று வருகின்றன.. அதே போல் தமிழ்நாட்டில் பல இடங்களில் மஞ்சுவிரட்டு போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.. ஜல்லிக்கட்டின் மற்றொரு வடிவமான மஞ்சு விரட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், வேகமாக ஓடும் முரட்டு காளைகளின் கொம்புகளை பிடித்து அடக்க முயற்சிப்பார்கள்..
மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும். மாடுபிடி வீரர்கள் காளையின் திமில் அல்லது கொம்புகளைப் பிடித்து குறிப்பிட்ட தூரம் ஓட வேண்டும். காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்ட பணமுடிப்பை வீரர்கள் பிடிப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மஞ்சுவிரட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன..
அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலகப்புகழ் பெற்ற மஞ்சுவிரட்டி போட்டிகள் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.. இந்த போட்டியில் 271 காளைகள் பங்கேற்றுள்ளன. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 123 பேர் காயமடைந்தனர்..
காளைகள் முட்டியதில் பெண்கள், குழந்தைகள், பார்வையாளர்கள் என பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.. இதில் படுகாயம் அடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக காரைக்குடி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
முன்னதாக சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.. இந்த போட்டியில் மாடு முட்டியதில் இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : நீலகிரியில் திடீர் மண் சரிவு.. 3 வட மாநில தொழிலாளர்கள் பலியான சோகம்..!



