கள்ளக்காதலில் மூழ்கிய அக்கா..!! குடும்ப மானத்தை காக்க கொலை..!! தம்பி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்..!!

affair murder

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில், குடும்பக் கௌரவத்தை காப்பதாக கூறிப் பெற்ற அக்காவையே தம்பி வெட்டிக்கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செய்துங்கநல்லூர் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா (35), கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுமித்ராவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அவரது தம்பி முத்துராஜா (27), அக்காவை கண்டித்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன. அக்காவின் செயல்பாடுகளால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுவதாக கருதிய முத்துராஜா, அவரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.

திட்டமிட்டபடி, நேற்று இரவு தனது நண்பர் வசந்த் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சுமித்ராவின் வீட்டிற்கு முத்துராஜா சென்றுள்ளார். நண்பரை வாசலில் காவலுக்கு நிற்க வைத்துவிட்டு, உள்ளே சென்ற முத்துராஜா தனது அக்காவிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுமித்ராவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுமித்ரா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த செய்துங்கநல்லூர் போலீசார், உயிரிழந்த சுமித்ராவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய முத்துராஜா மற்றும் அவரது நண்பர் வசந்த் ஆகிய இருவரையும் சில மணி நேரங்களிலேயே போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், “குடும்ப மானத்தை காக்கவே அக்காவை கொன்றேன்” என முத்துராஜா வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : பெண்களுக்கு குட் நியூஸ்..!! ரூ.4,000இல் இருந்து ரூ.8,000ஆக உயர்வு..!! புதிய அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!

CHELLA

Next Post

முதுகில் குத்திய ஓபிஎஸ்..!! இனி மன்னிப்பே கிடையாது..!! மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காட்டம்..!!

Sun Mar 1 , 2026
மதுரையில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த கேள்விக்கு, “இது எங்கள் குடும்ப விஷயம் போன்றது; பேச்சுவார்த்தை விவரங்களை இப்போது பொதுவெளியில் பகிர முடியாது. அனைத்தும் முடிவானதும் அதிகாரப்பூர்வமாக […]
piyush goyal

You May Like