டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இந்த வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் இந்த வெடிப்பு சம்பவத்தை “தீவிரவாத தாக்குதல்” என அறிவித்துள்ளது. இந்த கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யப்பட்ட மருத்துவர்களின் மொபைல் போன்களில் கண்டறியப்பட்ட டெலிகிராம் உரையாடல்களின் மூலம் “ஜெய்ஷ்-இ-மொஹம்மது தொடர்பு” இருப்பது உறுதியானது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெடிப்பின் தன்மையைப் பார்த்தால், போலீசார் பரிதாபாத் தீவிரவாத குழுவை சுற்றிவளைத்த நிலையில், அச்சத்தில் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்த நிலையில் செங்கோட்டை குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் முசம்மில், டாக்டர் அடில் மற்றும் டாக்டர் உமர் ஆகியோர் கூட்டாக சுமார் ரூ.20 லட்சம் பணத்தை திரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.. இது உமரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளனர்.. இந்தப் பணத்தைப் பயன்படுத்தி, குருகிராம் மற்றும் நுஹ் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 20 குவிண்டால் NPK உரத்தை இந்தக் குழு வாங்கியது. சிக்னல் செயலியில் 2-4 பேர் கொண்ட குழுவை உமர் உருவாக்கியதாகவும், அதில் அடில் மற்றும் முசம்மில் ஆகியோர் அடங்குவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஒரு பெரிய பயங்கரவாத சதித்திட்டத்தை இந்த சந்தேக நபர்கள் தீட்டியதாகவும் பல இடங்களில் ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்த வெடிபொருட்களுடன் சுமார் 32 பழைய வாகனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
தாக்குதல்களில் சாத்தியமான பயன்பாட்டிற்காக i20 மற்றும் EcoSport வாகனத்தை மாற்றியமைக்கும் பணியை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏற்கனவே தொடங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.. இந்த விசாரணை மேலும் விரிவடைந்துள்ள நிலையில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக இதே போன்ற பிற வாகனங்கள் தயாராக உள்ளதா என்பதை புலனாய்வாளர்கள் இப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
“i20 மற்றும் EcoSport க்குப் பிறகு, வெடிபொருட்கள் பொருத்தக்கூடிய மேலும் 32 பழைய வாகனங்களைத் தயார் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்ததுடம் விசாரணையில் தெரியவந்துள்ளது..



