சென்னை சாலிகிராமத்தில், பெற்ற மகளையே தனது இச்சைக்கு இரையாக்கிய ஒரு தாயின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நபர், வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வரும் சூழலை சாதகமாக்கிக் கொண்ட அவரது மனைவி, வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.
இந்த விவகாரம் 20 வயதான அவரது மகளுக்கு தெரியவரவே, அவர் தனது தாயை கண்டித்ததோடு, அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். மகளின் இந்த எதிர்ப்பு, அந்தப் பெண்ணுக்கு தடையாக இருந்த நிலையில், அவர் தீட்டிய திட்டம் பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைப்பதாக உள்ளது.
தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததை பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண், அவருக்குத் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து மயக்கமடைய செய்துள்ளார். மகள் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றதும், தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். அத்துடன் நில்லாமல், மயக்க நிலையில் இருந்த தனது மகளையும் அந்த நபரின் பாலியல் பசிக்கு உதவியாக இருந்துள்ளார்.
மற்றொரு நாளும் இதேபோலத் தூக்க மாத்திரை கொடுத்து மகளைத் தூங்க வைத்துள்ளார். ஆனால், அப்போது திடீரெனக் கண் விழித்த அந்த இளம்பெண், தன் அருகில் அந்த நபர் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார். உண்மை வெளிச்சத்திற்கு வந்ததும், அந்தப் பெண் தனது மகளை அறையில் வைத்துப் பூட்டி மிரட்டியதாக தெரிகிறது.
தாயின் பிடியிலிருந்து ஒருவழியாக தப்பித்த அந்த இளம்பெண், திருவண்ணாமலையில் உள்ள தனது உறவினர்களின் வீட்டிற்குத் தஞ்சம் புகுந்துள்ளார். அங்கு அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த இளம்பெண் கர்ப்பமாக இருப்பதாக கூறியதைக் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனைத் தொடர்ந்து, நடந்த கொடுமைகளை அந்த இளம்பெண் விவரிக்கவே, விவகாரம் காவல் நிலையத்திற்கு சென்றது.
சென்னை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தனது இன்பத்திற்காக பெற்ற மகளின் வாழ்வையே சிதைத்த அந்தப் பெண் மற்றும் அவருக்குத் துணையாக இருந்த அந்த நபர் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.



