எண்ணெய்கள் சமையலுக்கு சுவையைக் கூட்டுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எண்ணெய்களை உபயோகிக்கின்றனர். ஆனால், இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதால், ஆயிரக்கணக்கான மக்களின் ஆரோக்கத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கேரள ஆயுர்வேத ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் (KRA) கூற்றுப்படி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்(ரீபைண்ட் ஆயில்) ஒவ்வொரு ஆண்டும் 2 மில்லியன் மக்களின் மரணத்திற்கு காரணமாக மாறியுள்ளது.
பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. டிரான்ஸ் ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ள இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதால், டி.என்.ஏ சேதம், ஆர்.என்.ஏ அழிவு, மாரடைப்பு, இதய அடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம், சர்க்கரை, இரத்த அழுத்தம், ஆண்மைக் குறைவு, புற்றுநோய், எலும்பு பலவீனம், மூட்டு வலி, முதுகு வலி, சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, கொழுப்பு, பார்வை இழப்பு, வெள்ளைப்படுதல், மலட்டுத்தன்மை, மூல நோய், தோல் நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? விதைகளிலிருந்து எண்ணெய் அதன் ஓட்டுடன் சேர்த்து எடுக்கப்படுகிறது. இந்தச் செயல்பாட்டில், எண்ணெயில் உள்ள குறைந்த அளவிலான மாசுபாடுகள் மட்டுமே சுத்தப்படுத்தப்படுகிறது. மேலும், எண்ணெயின் ருசி, வாசனை மற்றும் நிறத்தை அகற்றை சுத்திகரிக்கப்படுகிறது.
தண்ணீர், உப்பு, காஸ்டிக் சோடா, சல்பர், பொட்டாசியம், அமிலங்கள் மற்றும் பிற ஆபத்தான அமிலங்கள் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைக் கழுவி, அதிலிருந்து அசுத்தங்களை நீக்குகின்றன. இந்தச் செயல்பாட்டில், தார் போன்ற திடக்கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன, இது டயர்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அமிலங்கள் இந்த எண்ணெயை நச்சுத்தன்மையாக்குகின்றன. இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதால், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் பலியாகின்றனர். இந்த slow poison என்று அழைக்கப்படுகிறது.
Readmore: இ-சலான்கள் மூலம் நடக்கும் மோசடி..! எது போலி… எது உண்மை…? மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி…!