வெற்றிலையில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

வெற்றிலை என்பது விசேஷங்களில் இடம்பெறும் முக்கியமான ஒரு பொருள். அதே போல இது நம் உடலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது. இதைப் பற்றி பார்க்கலாம்..

வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. கோழை இளக, வயிற்றுக் கோளாறு நீக்க, அஜீரணத்தை போக்க வெற்றிலை பயன்படுத்தலாம். பொதுவாக இருமல் – சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை போக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்டது வெற்றிலை. வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.

paan ke pattey
  1. வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்.
  2. வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்னை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகிவரும்.
    ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.
  3. வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது.
  4. வெற்றிலை நன்கு கசக்கி அதன் சாறு துளிகள் எடுத்து மூக்கில் வைத்து உறிஞ்சினால் தலைபாரம் மற்றும் சளி கரையும். வெற்றிலைக்கு தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல், மெல்லிலை போன்ற பல பெயர் உண்டு. வெற்றிலையில், கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை போன்ற வகை உள்ளது. வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவ பலன்களை தரக்கூடியவை.
  5. கொடி வகையை சேர்ந்த இது, வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது.
  6. வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது. உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குகிறது.
  7. வெற்றிலையை மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது.
    வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது. நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
  8. அளவோடு வெற்றிலை சாப்பிட்டுவந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும். வாய் துர்நாற்றத்தை போக்கும். வெற்றிலை சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் நன்றாக பிரியும்.
    கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும். இதன் இலை சாற்றுடன் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்து, தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு உண்டான சளி, இருமல் போன்றவை குணமாகும்.

Next Post

பகிர் செய்தி..! கோவையில் நடந்தது தீவிரவாத தாக்குதல்...! பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை...!

Mon Oct 24 , 2022
கோவையில் நடந்தது தீவிரவாத தாக்குதலே எனது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார் ‌ இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில்; நேற்று காலை கோவை நகரில்‌ உக்கடத்தில்‌ கார்‌ ஒன்றில்‌ சிலிண்டர்‌ வெடித்ததாக செய்தி அனைவரும்‌ கண்டிருப்பீர்கள்‌. இது தொடர்பாக தமிழககாவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அவர்களுடன்‌ காவல்துறை உயர்‌ அதிகாரிகள்‌ கார்‌ சிலிண்டர்‌ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து தங்களது முதல்‌ கட்ட விசாரணையை துவங்கினார்கள்‌. […]
Annamalai

You May Like