விடிய விடிய ஊற வைத்த கறிவேப்பிலை தண்ணீர்..!! வெறும் வயிற்றில் குடித்தால் கிடக்கும் அசர வைக்கும் பலன்கள்..!!

Karuveppilai 2025

மனித குலத்திற்கு கிடைத்த அருமையான மூலிகைகளில் ஒன்று கறிவேப்பிலை. முருங்கைக்கீரைக்கு அடுத்தபடியாக உணவில் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கும் கறிவேப்பிலையில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் A, B, C, E, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. கறிவேப்பிலையை எந்த வடிவத்தில் உட்கொண்டாலும் சத்துக்கள் கிடைக்கும் என்றாலும், அதனை தண்ணீரில் ஊறவைத்து அருந்துவதன் மூலம் பல மடங்கு கூடுதல் பலன்களைப் பெறலாம்.


உடல் எடை குறைப்பு :

ஊறவைத்த கறிவேப்பிலையுடன் புதினா இலைகள், எலுமிச்சை சாறு கலந்து வடிகட்டாமல் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக்கள் அதிக அளவில் கிடைத்து, தொப்பை குறையும். இதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தீர்வாக அமையும்.

அதேபோல், கறிவேப்பிலைக்கு செரிமான திறனை அதிகரிக்கும் தன்மையும் உண்டு. மேலும், 10 கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு வரம் :

நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வர, அதில் உள்ள இரும்புச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது. கறிவேப்பிலையில் உள்ள ரத்த சர்க்கரை குறைப்பு பண்புகள் கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்து, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

மேஜிக் பலன்கள் :

வழக்கமாக குடிக்கும் தண்ணீருக்கு பதிலாக, ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அருந்தலாம். இந்த சத்து நிறைந்த நீர், உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, செரிமானத்தைச் சீராக்குகிறது. மேலும், இது உடல் தசைகள் மற்றும் நரம்புகளை தளர்த்தி, மன அழுத்தத்தை போக்கி, அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் அளிக்கிறது.

இரவில் ஊறவைத்த கறிவேப்பிலை தண்ணீரைச் சீரகம், இந்துப்பு சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்து வந்தால், தலைமுடி கருகருவென வளரும், முடி உதிர்வது கட்டுப்படுத்தப்படும். மேலும், சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கிச் சருமம் பளபளப்பாகும். மேலும், இது வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதால், வயிறு மற்றும் குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

Read More : திருமண ஆசைக் காட்டி மாணவியுடன் அடிக்கடி உல்லாசம்..!! நிர்வாண வீடியோவை பார்த்து ரசித்த காதலன்..!! அடுத்து நடந்த பயங்கரம்..!!

CHELLA

Next Post

இந்தாண்டு முதல் கலிபோர்னியாவிலும் தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை..!! வந்தாச்சு புதிய சட்டம்..!! இந்தியர்கள் செம ஹேப்பி..!!

Wed Oct 8 , 2025
அமெரிக்காவின் இந்திய வம்சாவளியினருக்கு பெருமை சேர்க்கும் வகையில், கலிபோர்னியா மாகாணத்தில் இந்துக்கள் மற்றும் தெற்காசிய சமூகத்தினரின் முக்கியப் பண்டிகையான தீபாவளிக்கு இனி அதிகாரப்பூர்வ மாநில விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் (Gavin Newsom) சட்டமன்ற மசோதாவில் கையெழுத்திட்டதன் மூலம், இந்த அறிவிப்பு சட்டமாகியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு, கலிபோர்னியாவில் வசிக்கும் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான தெற்காசிய வம்சாவளியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் நியூசம் […]
Diwali 2025

You May Like