16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் தடை..! இந்தோனேசியா முக்கிய முடிவு..!

social media

இந்தோனேசியா 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் பல பிரபலமான சமூக ஊடக தளங்களில் கணக்கு வைத்திருக்க முடியாத வகையில் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிமுறையை அந்த நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் விவகாரங்களுக்கான அமைச்சர் மியூட்டியா ஹபித் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டு அமல்படுத்தினார்.


அமைச்சர் இதுகுறித்து பேசிய போது “ இளம் வயது பயனாளர்களை டிஜிட்டல் தளங்களில் ஏற்படக்கூடிய அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய விதிப்படி, 16 வயதிற்கு கீழான சிறார்கள் அதிக அபாயம் உள்ளதாக கருதப்படும் சமூக ஊடக தளங்களில் புதிய கணக்குகளை உருவாக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள கணக்குகளை பராமரிக்கவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.. இந்த விதி யூ டியூப், டிக் டாக், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ், எக்ஸ் போன்ற பரவலாக பயன்படுத்தப்படும் தளங்களுக்கு பொருந்தும்..

இந்தியா பரிசீலனை

கடந்த மாதம், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 15 வயதிற்கு கீழான குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடையை பரிசீலித்து வருகிறார் என்று குறிப்பிட்டார்.

தனது இந்தியா பயணத்தின் போது நடைபெற்ற AI Impact Summit 2026 நிகழ்ச்சியில் பேசிய மக்ரோன், இந்த நடவடிக்கை ஏற்கனவே பல நாடுகளில் நடைமுறையில் உள்ளதாகவும், பிரதமர் மோடியும் விரைவில் இதே வழியில் சேருவார் என்று நம்புவதாகவும் கூறினார்.

மேலும் “ பிரதமர் மோடி, அவர்களே, நீங்கள் விரைவில் இந்த குழுவில் சேருவீர்கள். குழந்தைகளையும் இளைஞர்களையும் பாதுகாக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பது என்பது ஒரு விதிமுறை மட்டும் அல்ல, அது ஒரு நாகரிகத்தின் அடையாளம்.” என்று தெரிவித்தார்..

ஆந்திரப் பிரதேசம் திட்டம்

ஆந்திரப் பிரதேச அரசு 13 வயதிற்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறது. மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இதுகுறித்து பேசிய போது “ இந்த திட்டம் குழந்தைகளை ஆன்லைன் தளங்களின் தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது.

ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில் பேசும்போது, இந்த திட்டம் அடுத்த 90 நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று அவர் தெரிவித்தார். இந்த முயற்சியின் மூலம் 13 வயதிற்கு கீழான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த யோசனையை முதலில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நர லோகேஷ் (முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. தற்போது அரசு அந்த யோசனையை ஆய்வு செய்து, அதை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை தயாரித்து வருகிறது.

மேலும், 13 முதல் 16 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்கும் இந்த விதிமுறையை விரிவுபடுத்த வேண்டுமா என்பது குறித்தும் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த வயது குழுவுக்கான இறுதி முடிவு, ஆலோசனைகளுக்குப் பிறகு எடுக்கப்படும் என்று முதல்வர் நாயுடு தெரிவித்தார்.

Read More : தொடரும் போர்..! துபாய் மக்களின் ஃபோனுக்கு வந்த எச்சரிக்கை செய்தி..! பீதியில் உறைந்த மக்கள்..!

RUPA

Next Post

வீட்டில் வாஸ்து குறை இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது..? தெரிஞ்சுக்க இதை படிங்க..!

Fri Mar 6 , 2026
ஜோதிடத்தில் வாஸ்து சாஸ்திரம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால்தான் அனைவரும் வாஸ்து விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் சிலர், தெரிந்தோ தெரியாமலோ, வாஸ்து விதிகளைப் பின்பற்றாததால் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எனவே வீட்டில் வாஸ்து குறைபாடுகள் உள்ளதா என்பதை எவ்வாறு அடையாளம் காண்பது? இதைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம். சிலரால் வாடகை வீடுகளிலோ அல்லது சொந்த வீடுகளிலோ கூட வாஸ்து குறைபாடுகளை […]
vasthu 1 1

You May Like