சில அறிவிலிகள் பகல் கனவு காண்கிறார்கள்; விஜய்யை மறைமுகமாக சாடிய முதல்வர் ஸ்டாலின்!

mk stalin 2

திமுகவின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு திமுக இளைஞர் அணி ;திமுக 75 அறிவுத்திருவிழா’ என்று நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளது.. இந்த நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் அறிவுத்திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்திட வேண்டும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்..


தொடர்ந்து பேசிய அவர் “ கழகத்தை தொடங்கியவர் அறிஞர் அண்ணா, 50 ஆண்டு காலம் கழகத்தை கட்டிக்காத்தவர் கலைஞர்.. அறிவொளியை பரப்புவதே கொள்கையாகவே கொண்டுள்ள திமுகவின் விழாவிற்கு அறிவுத்திருவிழா என பெயரிட்டது சரியே..

ஏதோ கட்சியை தொடங்கினோம்.. அடுத்த முதல்வர் நான் தான் என்று நாம் ஆட்சிக்கு வரவில்லை.. கழகத்தின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை சுற்றிச்சுழன்று பணியாற்றினார்கள்.. 18 ஆண்டுகள் உயிரைக் கொடுத்து ஒவ்வொருவரும் உழைத்தனர்.. எத்தனை பத்திரிகைகள், எத்தனை புத்தகங்கள், எத்தனை கூட்டங்கள், எத்தனை நாடகங்கள், எத்தனை திரைப்படங்கள், எத்தனை சிறைவாசங்கள், எத்தனை தியாகங்கள், எத்தனை துரோகங்கள்..

திமுக உழைத்த உழைப்பு சாதாரண உழைப்பு இல்லை.. நாம் பெற்ற வெற்றி என்பது இனி யாரும் படைக்க முடியாத வரலாற்று சாதனை.. இந்த வரலாறு பற்றி எல்லாம் தெரியாத சிலர் நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள்.. இன்னும் சில அறிவிலிகள் திமுகவை போல் வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள்.. திமுகவை போல் வெற்றி பெற திமுகவை போல் உழைப்பும் அறிவும் தேவை.. ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு திமுக தான்.. இப்படி ஒரு இயக்கம் இனி வரலாற்றி தோன்ற முடியாது.. திராவிடம் வெல்லும் அதை காலம் சொல்லும் என்பதை சொல்லும் திருவிழா தான் அறிவுத்திருவிழா..” என்று தெரிவித்தார்..

முதல்வரின் இந்த பேச்சு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பார்த்ததாக பார்க்கப்படுகிறது.. ஏனெனில் தவெக தலைவர் விஜய் அடுத்த முதல்வர் என்று கூறி வருகிறார்.. மேலும் திமுகவை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்.. இந்த சூழலில் கட்சி தொடங்கி உடன் அடுத்த முதல்வர், சில அறிவிலிகள் திமுகவை போல் வெற்றிப் பெறுவோம் என பகல் கனவு காண்கிறார்கள் என்று விஜய்யை மறைமுகமாக சாடி உள்ளார் என்றே பார்க்கப்படுகிறது..

Read More : சென்னையில் பிங்க் நிற ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் பறிமுதல் செய்யப்படும்.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!

RUPA

Next Post

தினமும் மஞ்சள் தண்ணீர் குடிக்கிறீங்களா? கவனம்.. இந்த மறைக்கப்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் வரலாம்..!

Sat Nov 8 , 2025
காலை நேரத்தில் மஞ்சள் தண்ணீர் குடிப்பது இன்று ஒரு ஆரோக்கிய நாகரிகமாக மாறியுள்ளது. சிலர் வெந்தயம் தண்ணீர், சிலர் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது போல, பலர் மஞ்சள் தண்ணீரையும் உடல்நலத்திற்கு சிறந்ததாக நம்புகின்றனர். மஞ்சளில் உள்ள “குர்குமின் (Curcumin)” என்ற இயற்கை மூலப்பொருள் அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) மற்றும் ஆக்சிடேண்ட் எதிர்ப்பு (Antioxidant) பண்புகளைக் கொண்டது. இதனால் செரிமானம் மேம்படுதல், தோல் ஆரோக்கியம், இதய செயல்பாடு மேம்பாடு, அழற்சி குறைவு […]
health benefits of turmeric water 1

You May Like