திருவள்ளூர் மாவட்டம் அனுப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விமல், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணையில் இறங்கினர்.
காவல்துறையின் தொடர் விசாரணையில், விமலின் நண்பர்களான சிவா, விக்கி, விஜி, பிரவீன் மற்றும் லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நண்பர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை விசாரித்தபோது அவர்கள் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விசாரணையில், விமல் தனது நண்பனான சிவாவின் மனைவியுடன் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது. இந்த உண்மை சிவாவுக்கு தெரியவந்தபோது, அவர் கடும் கோபத்திற்கு ஆளானார். தனது நண்பனே தனக்கு துரோகம் செய்ததை அறிந்து ஆத்திரமடைந்த சிவா, விமலைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதையடுத்து, தனது மற்ற நண்பர்களான விக்கி, விஜி, பிரவீன், மற்றும் லட்சுமிகாந்தன் ஆகியோருடன் இணைந்து கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி, அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தலாம் என்று கூறி, விமலை ஆரணி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அனைவரும் சேர்ந்து மது அருந்திய பின்னர், போதையில் இருந்த விமலை, சிவாவும் அவரது நண்பர்களும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலைக்குக் காரணமான 5 நண்பர்களையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : விஜய்யை பார்க்க சென்ற ரசிகர் மர்ம மரணம்..!! வீட்டிற்கு சடலமாக வந்த தம்பி..!! திடுக்கிட வைத்த அண்ணன்..!!