சூரிக்கு படிப்பு இல்ல.. அதான் பெயிண்ட் அடிச்சாரு.. நான் டாக்டர்.. சின்ன கேரக்டர்ல நடிக்க மாட்டேன்..!! – இன்ஸ்டா பிரபலம் பேச்சுக்கு ரசிகர்கள் கண்டனம்

actor 2025 07 07t134145 257 1751875983

இணையத்தில் ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என அழைக்கப்படும் டாக்டர் திவாகர், சமீபத்தில் நடிகர் சூரியை குறித்து பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டா பிரபலம் திவாகர், தனது சமீபத்திய பேட்டியில், “நான் சூரி மாதிரி நடிக்க மாட்டேன். அவர் படிக்காதவர், நான் படித்த டாக்டர்” எனக் கூறியது ரசிகர்களிடையே கோபத்தைக் கிளப்பி உள்ளது. பலரும் திவாகரின் பதிவுகளுக்கு எதிராக கமெண்டுகளில் திட்டி வருகின்றனர்.


மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் சூரி, தனது திரை வாழ்க்கையை மிகவும் எளிய நிலைமையில் ஆரம்பித்தவர். ஒளிப்பதிவு குழுவில் லைட் மேன் பணிகளிலும் ஈடுபட்டார். பின்னர் “வெண்ணிலா கபடிக் குழு” படத்தில் பரோட்டா சூரி என புகழ்பெற்றார். அதன் பிறகு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் துணை நாயகனாக நடித்து, தற்போது தனித்துவமான ஹீரோவாக வளர்ந்துள்ளார்.

அதேபோல கஜினி திரைப்படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிட்டு கொண்டே தன்னுடைய பாதுகாவலர்களை ஒரு விரலால் மிரட்டுவது போன்று நடித்து ரீல்ஸ் மூலம் பிரபலமானவர்தான் டாக்டர் திவாகர். அவர் இப்போது நடிகர் சூரியை தன்னோடு ஒப்பிட்டு பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

திவார் கூறியது என்னவென்றால், “நான் ஏற்கனவே பெரிய படிப்பு படிச்சு இருக்கிறேன். சூரிக்கு படிப்பு இல்ல, அதனால பெயிண்ட் அடிக்கிற வேலை எல்லாம் செஞ்சு இந்த நிலைமைக்கு போயிருக்கிறது. ஆனால் நான் இருக்கிற நிலைமைக்கும் திறமைக்கும் 500 ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் என்னால் நடிக்க முடியாது, என்னால் கீழே இருந்தெல்லாம் வர முடியாது” என்று கூறியிருக்கிறார்.

சூரியை தன்னோடு ஒப்பிட்டு டாக்டர் திவாகர் பேசியது விமர்சனங்களை சந்தித்து வருகிறது. திவாகர் சர்ச்சையில் சிக்குவது இது முதல் தடவையல்ல. மிஸ்கின் மற்றும் பிக் பாஸ் பாலாஜி பற்றியும் இவர் முன்னதாகவே விமர்சனங்களை வெளியிட்டு இருந்தார். பாலாஜியும் அவரை கிண்டல் செய்வது போல மீம் மற்றும் போஸ்டர்களை வெளியிட்டு பதிலளித்திருந்தார்.

Read more: ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் ஊதியம் கட்.. அரசு ஊழியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் எச்சரிக்கை!!

Next Post

நாய் குரைத்ததால் உயிர் தப்பிய 67 பேர்.. அடுத்த சில நிமிடங்களில் நடந்த பேரழிவு.. என்ன நடந்தது?

Tue Jul 8 , 2025
As incessant heavy rains wreak havoc in Himachal Pradesh, a dog's barking saved 67 lives in Mandi district. How did you know?
dogbark 1751962930 1

You May Like