தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் 25 ரயில் நிலையங்களில் டிக்கெட் விற்பனை முகவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்? முகவர் பணிக்கு விண்ணப்பிக்க, அந்தந்த ரயில் நிலையங்கள் அமைந்துள்ள மாவட்ட இளைஞர்களுக்கு மட்டுமே தகுதி உள்ளது. குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும்.
கட்டண விவரங்கள்
- விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1,120
- காப்புத் தொகை: விண்ணப்பிக்கும் ரயில் நிலையங்களுக்கு ஏற்ப ரூ. 2,000 அல்லது ரூ. 5,000
பணிகள்: முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் ஆகியவற்றை விற்பனை செய்யலாம். மேலும், கட்டணச் சலுகை பயண சீட்டுக்களை அந்தந்த ரயில் நிலைய மேலாளர் அனுமதி பெற்று விற்பனை செய்யலாம்.
கமிஷன் விகிதம்:
- ரூ. 20,000 வரை விற்பனைக்கு 25% கமிஷன்
- ரூ. 1 லட்சம் வரை விற்பனைக்கு 15% கமிஷன்
- ரூ. 1 லட்சத்திற்கு மேற்பட்ட விற்பனைக்கு 4% கமிஷன் அல்லது முகவருக்கான நிர்ணயிக்கப்பட்ட தொகை
முகவர்கள் நியமிக்கப்பட்ட ரயில் நிலையங்கள்:
மதுரை மாவட்டம்: கூடல்நகர், சமயநல்லூர், வாடிப்பட்டி
திண்டுக்கல் மாவட்டம்: வடமதுரை, தாமரைப்பாடி, அய்யலூர்
திருச்சி மாவட்டம்: குமாரமங்கலம், கல்பட்டி சத்திரம், வையம்பட்டி, கொளத்தூர், பூங்குடி
புதுக்கோட்டை மாவட்டம்: புதுக்கோட்டை, திருமயம், கீரனூர், வெள்ளனூர்
சிவகங்கை மாவட்டம்: சிவகங்கை, பனங்குடி, மேலக்கொன்னகுளம், செட்டிநாடு, கல்லல்
ராமநாதபுரம் மாவட்டம்: சூடியூர்
விருதுநகர் மாவட்டம்: கள்ளிக்குடி, துலுக்கபட்டி
திருநெல்வேலி மாவட்டம்: கங்கை கொண்டான், தாழையூத்து
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ இணையதளமான https://sr.indianrailways.gov.in/ மூலம் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 25, மாலை 3 மணி.
Read more: FASTag ஆண்டு பாஸ்.. முதல் நாளிலிருந்து செம ரெஸ்பான்ஸ்.. இத்தனை லட்சம் பயனர்களா..?