Sovereign Gold Bond | முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! 8 ஆண்டுகளில் 307% லாபம்..!! ஒரு சவரன் ரூ.12,066ஆக நிர்ணயம்..!!

Sovereign Gold Bonds 2025

சாவரின் கோல்டு பாண்டுகள் (Sovereign Gold Bonds – SGB) திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கிய லாப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டில் நவம்பர் 6 அன்று வழங்கப்பட்ட SGB சீரிஸ்-VI பாண்டுகளின் முதிர்வு காலம் நாளையுடன் (நவம்பர் 6) முடிவடைகிறது. 8 ஆண்டுகள் முழுமையாக முதலீடு செய்தவர்களுக்கு, ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பை ரூ.12,066 ஆக நிர்ணயித்து RBI தொகையைத் திருப்பி அளிக்கிறது.


2017-ஆம் ஆண்டில் இந்த SGB திட்டம் தொடங்கப்பட்டபோது, முதலீட்டாளர்கள் ஒரு கிராம் தங்கத்தை ரூ.2,961 என்ற விலைக்கு வாங்கினர். தற்போது ரூ.12,066 என்ற மீட்பு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், 8 ஆண்டு காலத்தில் முதலீட்டாளர்களுக்குக் கிட்டதட்ட 307% அபரிமிதமான மொத்த வருமானம் கிடைத்துள்ளது.

உண்மையான தங்கத்தை அல்லது Gold ETF-களைக் காட்டிலும் இந்த வருமானம் மிக அதிகம் என்று நிதியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம், முதலீட்டாளர்கள் தங்கத்தின் விலை உயர்வினால் கிடைத்த லாபம் மட்டுமின்றி, தொடர்ச்சியாக ஆண்டுக்கு 2.5% வட்டியையும் (அரை வருடத்திற்கு ஒருமுறை) தங்கள் ஆரம்ப முதலீட்டுக்குச் சேர்த்துப் பெற்றதுதான். இந்த பாண்டுகளுக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறும் வசதி இருந்தாலும், முழு 8 ஆண்டுகள் காத்திருந்தவர்களுக்கு இந்த முறை மிக அதிக பலன் கிடைத்துள்ளது.

Read More : FLASH | பொதுக்குழுவுக்கு என்ட்ரி கொடுக்கும்போதே விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்..!! கண்முன்னே தவெக கொடிகள், பேனர்கள் கிழிப்பு..!!

CHELLA

Next Post

திருமணம் ஆன 4-வது நாளில் கொழுந்தியா உடன் ஓடிப்போன கணவன்.. அக்காவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!! கோவையில் ஷாக் சம்பவம்..

Wed Nov 5 , 2025
கோவை மாவட்டம் சூலூர் அருகே 40 வயதான நபருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவரது மனைவி 7 மாத கர்ப்பமாக உள்ளார். மனைவியின் தங்கைக்கு 32 வயதாகிறது. திருமணம் ஆகாத தனது தங்கைக்கு அக்கா மாப்பிள்ளை பார்த்து வந்தார். இறுதியில், மாப்பிள்ளையை பார்த்து திருமணமும் செய்து வைத்தார். ஆனால், திருமணமாகி 4வது நாளில் தங்கையை காணவில்லை.. உறவினர்கள் அவரை எங்கெங்கோ தேடினார். ஆனால் எங்குமே […]
marriage

You May Like