பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1950-ம் ஆண்டு, செப்டம்பர் 17 அன்று குஜராத்தின் வாட்நகரில் தாமோதர் தாஸ் மோடி மற்றும் ஹீராபென் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும் ஈர்க்கும் தலைவராக இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சாரகராக பிரதமர் மோடியின் அரசியல் பயணம் தொடங்கியது. பிரதமர் மோடி 2001 முதல் 2014 வரை மூன்று முறை குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இறுதியாக அவர் நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி, தனது சிறுவயதில், உள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள தனது டீ ஸ்டாலில் தனது தந்தைக்கு உதவுவார். பள்ளியில் படிக்கும்போதே நிறைய நாடகங்களில் பங்கேற்று, தனது 13வது வயதில் சேதமடைந்த சுவரைச் சரிசெய்ய பணம் சம்பாதிக்க நாடகம் நடத்தினார். 8 வயதாக இருந்தபோது, ஆர்.எஸ்.எஸ். பற்றி தெரிந்து கொண்ட போடி, அந்த அமைப்பின் அமர்வுகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார். அங்கே, அவர் லக்ஷ்மண்ராவ் இனாம்தாரைச் சந்தித்தார், அவர் பின்னர் அவரது வழிகாட்டியாக ஆனார் மற்றும் அவரை அமைப்பில் ஜூனியர் கேடட்டாக இணைத்தார்.
1971 போருக்குப் பிறகு, மோடி ஆர்.எஸ்.எஸ்-க்காக முழுநேர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 1985 ல் பாஜகவுக்கு நியமிக்கப்பட்டார். அப்போதைய துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி 1990 ரத யாத்திரையின் தலைப்புச் செய்தியாக இருந்தபோது மோடி முக்கிய பங்கு வகித்தார்.
மோடி 1967 இல் உயர்நிலைப் பள்ளி கல்வியை முடித்தார் மற்றும் 1978 இல் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். 1982 இல் குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவர் தனது இளம் பருவத்திலேயே தன்னந்தனியாக பயணங்களை மேற்கொண்டார். இமயமலையில் சாதுக்களை சந்திப்பது உட்பட பல இடங்களை அவர் தனியாக சென்று பார்வையிட்டார்.
2001-ம் ஆண்டு குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றபோது அவர் குஜராத் சட்டப் பேரவை உறுப்பினராக இருக்கவில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிதான். இந்திரா காந்திக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையும் மோடியையே சாரும்..
2014ஆம் ஆண்டு போர்ப்ஸ் இதழின் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடி 15வது இடத்தைப் பிடித்தார். ட்விட்டரில் 6 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர்.. இதனால் நரேந்திர மோடி மிகவும் பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவர். இந்திய பிரதமர் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிதைகள் எழுதுவதிலும், புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் உண்டு. அவர் தனது தாய் மொழி குஜராத்தியில் எழுதி வருகிறார், மேலும் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடி புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, 13 வருட சேவையில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை. மோடி ஒவ்வொரு நாளும் சுமார் 5 மணி நேரம் தூங்குவார், காலையில் சுமார் 5: 30 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கம் கொண்டுள்ளார். அவர் ஆரோக்கியத்தை காக்க சைவ உணவுகளை மட்டுமே உண்டு வருகிறார்.
மிக சக்திவாய்ந்த நபர்களின் 2014 ஃபோர்ப்ஸ் பத்திரிகை பட்டியலில் மோடி 15 வது இடத்தைப் பிடித்தார். அதே ஆண்டில், டைம் பத்திரிகையின் ஆண்டின் சிறந்த நபராக அவர் இடம் பெற்றார். டைம் பத்திரிகையின் 2014, 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ பூங்காவின் தனிமைப்படுத்தப்பட்ட அடைப்புகளில் நம்பியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மூன்று சிறுத்தைகளை விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவரது ஆதரவாளர்களும், பாஜக தொண்டர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஜனாதிபதி திரௌபதி முர்மு, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.. மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உட்பட உலகம் முழுவதும் உள்ள பல அரசியல் தலைவர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்துள்ளன.