நாம் தினசரி பயன்படுத்தும் நாணயங்களில் உள்ள குறியீடுகளை வைத்து அவை எங்கு அச்சிடப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் உள்ள நாணயங்கள் நான்கு அச்சகங்கள் அச்சிடுகின்றன. அதன் படி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் தேவாஸ் பகுதியிலும், மகாராஷ்டிராவில் நாசிக், கர்நாடகாவில் மைசூர் மற்றும் மேற்கு வங்காளத்தில் சல்போனி ஆகிய இடங்களில் அச்சடிக்கப்படுகின்றன. தேவாஸ் மற்றும் நாசிக் அச்சகங்கள் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிற்கு சொந்தமானது, இது இந்திய அரசாங்கத்தின் நிறுவனமாகும். மைசூர் மற்றும் சல்போனியில் உள்ள அச்சகங்கள் பாரதீய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் மூலம் நிறுவப்பட்டது, இது ரிசர்வ் வங்கியின் முழுச் சொந்தமான துணை நிறுவனமாகும்.

நாணயங்கள் இந்திய அரசால் அச்சிடப்படுகின்றன. அதனை ரிசர்வ் வங்கி விநியோகம் செய்யும் ஒரு அமைப்பாகும். மும்பை, உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டா, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நான்கு இடங்களில் உலோக நாணயங்கள் அச்சிடப்படுகின்றன. இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக்கில் அச்சடிக்கப்படுகின்றன. 1950 முதல் இந்திய ரூபாய் நோட்டுகளும் நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றது. ஆண்டுதோறும் புதிய நாணயங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த சில்லறை காசுகள் நம் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமானவை. இந்த நாணயங்கள் துருப்பிடிக்காத எஃகு நாணயங்கள் ஆகும். இந்திய நாணயங்களில் பலவிதமான குறியீடுகள் இருக்கும், இதனை வைத்து அந்த நாணயம் எந்த இடத்தில் தயாரிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த குறியீட்டை mint marks சொல்லலாம் . நாணயங்கள் அச்சிடப்படும் ஆலயத்தை தான் மிண்ட் என கூறுகின்றனர். இந்த குறியீடானது நாணயத்தின் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும்.
உங்களிடம் இருக்கும் நாணயம் நட்சத்திர வடிவத்தில் இருக்கும் நாணயங்கள் ஹைதராபாத்தில் தயாரிக்கப்படுகிறது. இது 1903 நிஜாம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும். அதேபோல ஒரே ஒரு புள்ளி இருந்தால் அவை டெல்லியில் தயாரிக்கப்படும் நாணயங்கள் என்று கருத்தில் கொள்ளலாம். டெல்லியில் செயல்பட்டு வரும் இந்த நாணய தயாரிப்பு நிறுவனம் 1984ல் தொடங்கப்பட்டது ஆகும்.

அதே போல எந்த குறியீடும் இல்லாமல் இருந்தால் அவை கொல்கத்தாவை சேர்ந்தவையாகும். இந்த நிறுவனம் 1757ல் தொடங்கப்பட்டது ஆகும். டைமண்ட் வடிவம் இருந்தால் அவை மும்பையில் தயாரிக்கப்படும் நாணயங்கள் என்று அர்த்தம் கொள்ளலாம். இவற்றில் சில சமயங்களில் பி அல்லது எம் என்கிற குறியீடும் இருக்கும்.