fbpx

ஆடையே அணியாமல் சுற்றித்திரியும் மக்கள்… 93 வருட பாரம்பரியத்தை பின்பற்றும் கிராமம்!

பிரிட்டன் நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில் பாரம்பரியத்தை பின்பற்றும் வகையில் 93 வருடங்களாக மக்கள் ஆடையின்றி நிர்வாணமாக வாழ்ந்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் பல வகையான பழங்குடியின மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். தொழிற்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்த நவநாகரீக காலகட்டத்தில் சில குறிப்பிட்ட வகை பழங்குடியினர் இன்றும் பாரம்பரிய முறைப்படி வாழ்ந்துவருகின்றனர். அந்தவகையில் பிரிட்டன் நாட்டின் ஹெர்ட்போர்ட்ஷையர் நகரத்திற்கு அருகே உள்ள ஸ்பீல்ப்ளாட்ஸ் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் பாரம்பரியத்தை பின்பற்றும் வகையில் 93 ஆண்டுகளாக முழு நிர்வாணமாக வாழ்ந்துவருகின்றனர். பெரிய பங்களாக்களில் வாழ்ந்தாலும், ஆடையின்றி வாழ்கின்றனர். இங்கு அழகான வீடுகள், நீச்சல் குளம் போன்ற அனைத்து அம்சங்களும் உள்ளன. இத்தகைய விசித்திரமான கிராமத்துக்கு தபால் காரர்கள், டெலிவரி பாய்கள் தினசரி வந்து செல்கின்றனர்.

இந்த கிராமத்தை கடந்த 1929ம் ஆண்டில் சார்லஸ் மெக்காஸ்கி என்பவர் உருவாக்கினார். அப்போது இயற்கையான வாழ்க்கையை மக்கள் வாழ வேண்டும் என்றும் இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையில் எந்தவேறுபாடும் இல்லை என்பதை அவர் வலியுறுத்தினார். மேலும் ஆடைகள் அணிய வேண்டாம் என்று கேட்டு கொண்டார். இதையடுத்து தான் அன்று முதல் இன்றுவரை மக்கள் ஆடைகள் அணியாமல் இருப்பதை மரபாக பின்பற்றி வருகின்றனர். இந்த கிராமத்தின் தனித்துவ பாரம்பரியத்தை உலகெங்கிலும் இருந்து பலர் ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களை எடுத்துள்ளனர்.

Kokila

Next Post

ஒரு பெண்ணுக்காக மட்டும் நான் படைக்கப்படவில்லை!... 3சகோதரிகளை திருமணம் செய்த கென்ய இளைஞர்

Mon Feb 6 , 2023
கென்யாவில் 3 சகோதரிகளை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலதார மணம் (polygyny)என்பது ஒரு ஆண் ஒரே நேரத்தில் பல பெண்களை திருமணம் செய்து வாழ்வதாகும். வரலாற்று நோக்கில், இந்தமுறை உலகின் பெரும்பான்மையான சமுதாயங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. நவீன சமுதாயங்கள் பலவற்றில், இம் முறை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதுடன், இத்தகைய திருமணத்திற்கு பெரும்பாலான நாடுகளில் சட்டப்படி அனுமதி கிடையாது. இந்தநிலையில், கென்யாவில் இளைஞர் ஒருவர் 3 சகோதரிகளை […]

You May Like