சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து எந்தவொரு வாக்காளரும் அல்லது அரசியல் கட்சியும், பெயர்கள் விடுபட்டிருந்தால் கோரிக்கை வைக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்யாதவர்கள், இறந்தவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், பற்றிய வாக்குச்சாவடி நிலைப்பட்டியல்கள் 2025 ஜூலை 20ஆம் தேதி BLOs/EROs/DEOS/CEOs மூலம் வாக்குச்சாவடி நிலைப்பட்டியல்களில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்ட பகிரப்பட்டுள்ளன. SIR உத்தரவுப்படி, எந்தவொரு வாக்காளரும் அல்லது அரசியல் கட்சியும், பெயர்கள் விடுபட்டிருந்தால் கோரிக்கை வைக்கலாம், அல்லது தவறாக சேர்க்கப்பட்டிருந்தால் எதிர்ப்பு தெரிவிக்கலாம். இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 1, 2025 ஆகும்.
99% வாக்காளர்கள் ஏற்கனவே உள்ளனர். BLOS/BLAS, 21.6 லட்சம் இறந்த வாக்காளர்களின் பெயர்களைத் தெரிவித்துள்ளனர். BLOS/BLAS, 31.5 லட்சம் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை அறிவித்துள்ளனர். BLOS/BLAs, 7 லட்சம் வாக்காளர்கள் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். உள்ளூர் BLOs/BLAs தகவலின்படி, 1 லட்சம் வாக்காளர்கள் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
BLOs/BLAs வீடு வீடாக சென்று பார்வையிட்ட போதும், 7 லட்சத்துக்கும் வாக்காளர்களிடம் இருந்து இன்னும் படிவங்கள் குறைவான பெறப்படவில்லை. 7.21 கோடி வாக்காளர்களின் (91.32%) படிவங்கள் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன; இவர்கள் அனைவரது பெயர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் (Draft Electoral Roll) இடம் பெறும். மீதமுள்ள படிவங்களும் BLO/BLA அறிக்கைகளுடன் இணைத்து கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில் சரிபார்க்க வசதியாக்கப்படும்.
SIR உத்தரவுப்படி, வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1, 2025 அன்று வெளியிடப்படும். அச்சு மற்றும் மின்னணு பதிப்புகள் அனைத்து 12 அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் இணையதளத்திலும் கிடைக்கும். தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்துகிறது: SIR உத்தரவுப்படி, எந்தவொரு வாக்காளரும் அல்லது அரசியல் கட்சியும் பெயர்கள் விடுப்பட்டிருந்தால் கோரிக்கை வைக்கலாம் அல்லது தவறாக சேர்க்கப்பட்டிருந்தால் எதிர்ப்பு தெரிவிக்கலாம் – கடைசி தேதி செப்டம்பர் 1, 2025 என தெரிவிக்கப்பட்டுள்ளது.