பொதுவாக 12 ராசியினருக்கும் ஒரு இஷ்ட தெய்வமும், கிரகங்களும் இருக்கும். இதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும் துணையாக இருக்கும் கிரகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் இடத்தை மாற்றிக் கொள்ளும். இவ்வாறு இடத்தை மாற்றிக் கொள்ளும் போது கிரகங்களின் தாக்கத்தின்படி 12 ராசியினருக்கும் நல்லது, கெட்டது என நிகழும்.
அந்த வகையில் நவகிரகங்களின் முதன்மையான கிரகமான சூரியன், சனிபகவானின் முதன்மை ராசியான கும்ப ராசியினுள் நுழைந்துள்ளார். இதனால் கும்ப ராசியின் இரண்டு பக்கமும் இரண்டு கிரகங்கள் அமைந்து உபயோகச்சாரி ராஜ யோகம் 500 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது உருவாகியுள்ளது. இதனால் மூன்று ராசியினருக்கு பல்வேறு நன்மைகள் நிகழ போவதாக ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை என்னென்ன ராசிகள் என்று பார்க்கலாம்?
மகரம் – மகர ராசியினருக்கு உபயோகச்சாரி ராஜயோகம், வேலை மற்றும் வியாபார விஷயத்தில் மிகவும் சிறப்பானதாக அமையும். திடீரென்று பண வரவு அதிகரிக்கும். தொழிலை விரிவு படுத்தினால் நல்ல ஆதாயம் கிடைப்பதோடு, வெளிநாட்டில் இருந்தும் பண வரவு அதிகரிக்கும்.
துலாம் – உபயோகச்சாரி ராஜயோகம் துலாம் ராசியினருக்கு திடீரென்று வருமானத்தை அதிகரிக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கும், வேலையில் பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். புதிய வருமான ஆதாரங்களை பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.
கும்பம் – கும்ப ராசியினருக்கு உபயோகச்சாரி ராஜயோகம் அதிர்ஷ்டத்தை தரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைத்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். பேச்சால் பல காரியங்களை சாதித்து பணவரவை பெருக்குவீர்கள்.