நாமக்கல் அடுத்துள்ள கூலிப்பட்டியில் இயற்கை எழில் மிகுந்த மலை மீது அழகுற அமைந்துள்ளது இந்த கந்தகிரி பழனி ஆண்டவர் திருக்கோயில். 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் பழனி மலையில் உள்ளது போலவே முருகபெருமான் ஆண்டி கோலத்தில் இருப்பதால் ‘பழனி ஆண்டவர்’ என்றே அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் மூலவரான பழனி ஆண்டவரை வழிபட்டால் விரைவில் திருமணமாகும் என்பதும், முருகனுக்கு சஷ்டி பூஜை செய்து மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கோயில் அமைப்பு : மலையின் மீது ஏறத் தொடங்கி சில படிகளை கடந்தால் தெற்கு பகுதியில் சிவபெருமான் கழுத்தில் பாம்புடன் காட்சி அளிக்கிறார். நுழைவாயிலை கடந்து ஏறத் தொடங்கியதும் ஞானப் பழத்தால் ஏற்பட்ட பிரச்னையில் கோபித்துக் கொண்டு கயிலை மலையை விட்டுச் சென்ற முருகனை சமாதானப்படுத்தும் வகையிலும், முருகன் தந்தைக்கு உபதேசம் செய்யும் நிகழ்வும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மலையின் மேலே இடும்பன் கோயிலும், விநாயகர் சன்னதியும் அமைத்துள்ளது.
இங்குள்ள இடும்பனை வணங்கினால் கோபம், சூழ்ச்சி, வஞ்சகம், ஆத்திரம் போற்றக் கெட்ட குணங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும் எனக் கூறப்படுகிறது. இந்த குகைக் குளத்தில் உள்ள தண்ணீரை பக்தர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று தெளித்தால், சகல தோஷங்களும் நீங்கும். கந்தர்மலை வேல்முருகனை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். வியாபாரம் விருத்தியாகும். நோய் நொடிகள் அகலும். தீவினைகள் விலகி ஓடும். நோய் நொடிகள் அகலும். தீவினைகள் விலகி ஓடும். என்ன வேண்டுதல் வைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்றுவார் ‘கந்தர்மலை வேல்முருகன்’ என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோயில் வரலாறு : புராண கதைகளின்படி, ஒரு முறை கானகத்தில் முருகனோடு இருந்த வள்ளியம்மைக்கு திடீரென்று விக்கல் ஏற்பட்டது. அதை நிறுத்த ஏதாவது வழி சொல்லும்படி வள்ளியம்மை, முருகப்பெருமானிடம் வேண்டினாள்.. உடனே முருகப்பெருமான் “எந்தக் குளத்தில் சூரிய ஒளியும், சந்திர ஒளியும் படவில்லையோ, அந்த குளத்தில் இருந்து நீர் எடுத்து பருகினால் விக்கல் நின்றுவிடும்” எனக் கூறினார்.
இதையடுத்து வள்ளியம்மை இந்த கந்தர் மலை குளத்தில் நீர் எடுத்து பருகியதும், விக்கல் நின்று விட்டதாக செவி வழிக் கதை ஒன்றை சொல்கிறார்கள். வள்ளியின் தாகம் தீர்த்த மலைக்குகையில் அற்புத சித்தர்கள் அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்கள். அரிய வகை நாகங்களும் இங்கே அதிகமாக இருந்ததாக சொல்கிறார்கள். அரிய வகை நாகங்களும் இங்கே அதிகமாக இருந்ததாக சொல்கிறார்கள். இன்றளவும் சித்தர்களும், நாகங்களும் அரூபமாக இங்கே நடமாடிக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
Read more ; “இதனால் தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை”; கோவை சரளா பகிர்ந்த தகவல்..