fbpx

எப்போதும் வியர்த்து கொண்டிருக்கும் அதிசய அம்மன் சிலை.! இக்கோயில் எங்கு உள்ளது தெரியுமா.!?

பொதுவாக ஒவ்வொரு கோயிலில் தனி சிறப்பும், வரலாறும் எப்போதும் சிறப்பு வாய்ந்தவையாகவே உள்ளது. ஆனால் ஒரு சில கோயிலின் அற்புதமான மற்றும் மர்மமான வரலாறு பலருக்கும் தெரிந்திருக்காது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் சின்னமனூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் பல அற்புதமான மற்றும் ஆச்சர்யமான உண்மைகளை உள்ளடக்கியுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

இந்த பூலாநந்தீஸ்வரர் திருக்கோயிலில் சன்னதியில் அமைந்துள்ள அம்மனை சிவகாமி அம்மன் என்று அழைக்கப்பட்டு வருகிறார். இந்த கோயிலில் அமைந்துள்ள சிவகாமி அம்மனுக்கு அர்ச்சகர் எத்தனை முறை அலங்காரம் செய்தாலும் முகத்தில் மட்டும் வேர்வை வடிந்து கொண்டே உள்ளது. இதன் காரணம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை.

இக்கோயிலில் அமைந்துள்ள லிங்கத்தின் சிலை வெட்டுப்பட்ட நிலையில் உள்ளது. இதன் காரணமாக கூறப்பட்டு வருவது, மன்னன் ஆலிங்கனம் சிவனுடன் சண்டை செய்த போது இந்த காயம் ஏற்பட்டதாகவும், அதன் நினைவாகவே வெட்டு காயத்துடனும், மன்னனின் மார்பு கவச தடத்துடனும் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்ப்பவர்களின் பார்வை எந்த அளவிற்கு உயரமாக செல்லுமோ அந்த அளவிற்கு இக்கோயிலின் சிவலிங்கம் உள்ளது என்பது தனி சிறப்பாக கருதப்பட்டு வருகிறது.

மேலும் இந்த ஊரில் சுரபி எனும் நதி உள்ளது. இந்த நதியில் இறந்தவர்களின் எலும்புகள் விழுந்தால் அந்த எலும்புகள் கல்லாக மாறும் என்றும், இக்கோயிலின் மரத்தில் பூக்கும் நாகலிங்கப்பூவின் நடுவில் லிங்கம் உள்ளது போலவும், லிங்கத்தை சுற்றி ஆதிசேஷன் நிற்பது போலவும் உள்ளது. எனவே இந்த பூவை பக்தர்கள் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து சென்று வழிபட்டு வருகின்றனர்.

English summary : history news about amman temple

Read more : உடல் எடையை மேஜிக் போல் குறைக்கும் பிரண்டை.! எப்படி பயன்படுத்தலாம்.!?

Rupa

Next Post

Valarmathi | தப்பித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Fri Feb 23 , 2024
அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2001 – 2006ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் பா.வளர்மதி. பதவி காலத்தின்போது வருமானத்திற்கு அதிகமாக 1.70 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக இவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2012ஆம் ஆண்டு பா.வளர்மதி […]

You May Like