fbpx

வாஸ்து டிப்ஸ் : மணி பிளான்ட்டுக்கு அடுத்தபடியாக செல்வத்தை அதிகரிக்கும் அற்புத செடி.!?

பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும், செல்வத்தை அதிகரிப்பதற்கும், வெற்றியடைவதற்கும் பல வழிகளை குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் ஒன்று வீட்டில் மணி பிளான்ட் செடியை வளர்ப்பதன் மூலம் செல்வத்தை அதிகரிப்பதற்கான வழியை கூறியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக உள்ளது இந்த சங்கு பூ செடி.

இந்த சங்குப்பூ செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் நேர்மறையான ஆற்றலை அதிகரித்து, பணவரவு பெருகும் என்ற ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளை, நீலம் என பல வண்ணங்களில் பூத்து குலுங்கும் இந்த சங்கு பூ செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம் மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம் என அனைத்துமே வீட்டில் வளரும் என்று நம்பப்பட்டு வருகிறது.

1. வெள்ளை நிற சங்குப்பூ செடியை வளர்த்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரித்து, தீய சக்திகள் மற்றும் எதிர்மறையான ஆற்றல்களை அண்ட விடாமல் செய்கிறது. மேலும் மகிழ்ச்சியும், அமைதியும் வீட்டில் நிலவ செய்கிறது.
2. நீல நிற சங்கு பூவை விஷ்ணு பகவானிற்க்கு படைத்து வேண்டி வந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும்.
3. சனி தோஷம் உள்ளவர்கள் சனி பகவானுக்கு நீல நிற சங்கு பூக்களை தொடுத்து மாலை போட்டு வழிபட்டு வந்தால் சனி தொல்லை விலகும்.
4. வீட்டின் வடக்கு திசையில் சங்கு பூ செடியை வைத்தால் சுப பலன்கள் கிடைப்பதோடு, வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.
5. மேற்கு மற்றும் தெற்கு திசையில் சங்கு பூ செடியை கட்டாயமாக வைக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary : vastu tips about butter fly pea flower

Read more : அதிர்ச்சி.! உடலில் புரதச்சத்து அதிகமானால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுமா.!?

Rupa

Next Post

தீராத கடனை தீர்க்கும் எளிய பரிகாரம்.! இதை ஒரு முறை செய்து பாருங்க.!?

Tue Feb 27 , 2024
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலருக்கும் பணத்தேவை என்பது அதிகமாகி கொண்டே செல்கிறது. பல கஷ்டங்களை சந்தித்தாலும் பணத்திற்காக தொடர்ந்து வேலைகள் செய்து வருகின்றனர். சிலர் அவசர தேவைக்காக வாங்கும் கடன் காலப்போக்கில் அதிகரிப்பதால் அதை செலுத்த முடியாமல் திக்குமுக்காடி போகின்றனர். இவ்வாறு அதிகப்படியான கடனிலிருந்து விடுபட பல முறைகளை செய்திருந்தாலும், இந்த ஒரு பரிகாரம் செய்து பாருங்கள். கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் அதிலிருந்து விடுபடலாம். பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்மஞ்சள், […]
இனி ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு Cash on Delivery கிடையாது..? நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

You May Like