100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் புஜாராவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக களத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் கைதட்டி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. தடுப்புமுறை ஆட்டத்திற்கு பெயர் போன செதேஷ்வர் புஜாராவுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது.
100-வது போட்டியில் விளையாடும் புஜாராவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக களத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் கைதட்டி அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், புஜாராவை கட்டி அணைத்து வீரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலிய அணி வீரர்களும் புஜாராவுக்கு தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். புஜாராவிற்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் நூறாவது டெஸ்ட் போட்டிக்கான தொப்பியினை வழங்கி அவரை கவுவித்தார். இப்படி இந்திய வீரர்கள் புஜாராவுக்கு அளித்த மரியாதையை வீடியோவாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது பிசிசிஐ.