fbpx

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் திடீர் மாற்றம்..? புதிய வீரர்கள் இவர்களா..?

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தீபக் ஹூடா 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. இதனால், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தீபக் ஹூடாவின் காயம் தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அந்தக் காயம் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு மாற்று வீரர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதேபோல், தற்போது முகமது ஷமி கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளார். எனினும் அவர் கார்டியோ பரிசோதனையில் தகுதி பெற வேண்டும். அதன்பின்னர் அவர் பயிற்சியை தொடங்கும் சூழல் உள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றம் செய்ய அக்டோபர் 9ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. ஆகவே, அதற்குள் முகமது ஷமி உடல்தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் முகமது ஷமி ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் தான் உள்ளார். 

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் திடீர் மாற்றம்..? புதிய வீரர்கள் இவர்களா..?
தீபக் ஹூடா

ஆனால், தீபக் ஹூடா அக்‌ஷர் பட்டேலுக்கு அடுத்தப்படியாக 15 பேர் கொண்ட அணியில் இரண்டாவது ஆல்ரவுண்டராக உள்ளார். ஆகவே, அவருடைய காயத்தை பொறுத்து அணியில் மாற்றம் இருக்குமா? இல்லையா? என்பது தெரியவரும். ஏற்கனவே காயம் காரணமாக டி20 தொடருக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ஜடேஜா இடம்பெறவில்லை. இந்தச் சூழலில் தற்போது மேலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி…

ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா,ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஜஸ்பிரீத் பும்ரா, தீபக் ஹூடா, அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங். இவர்கள் தவிர ரிசர்வ் வீரர்களாக முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் உள்ளனர். 

Chella

Next Post

தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

Thu Sep 29 , 2022
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Officer பணிகளுக்கு என 110 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது ரூ.63,840 […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like