fbpx

மழையின் குறுக்கீட்டால் அதிரடி திருப்பம்..! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா..!

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்க்கு இடையே நடந்த 3 ஒருநாள் போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள், 5 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, 2 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மூன்றாவது ஒரு நாள் ஆட்டம், நேற்றிரவு நடைபெற்றது. டிரினிடட்டில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் ஷிகர் தவனும், சுபமன் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். ஷிகர் தவன் அரை சதம் பதிவு செய்தார். அவர் 58 ரன்கள் எடுத்திருந்தபோது பூரனிடம் கேட்ச் ஆகி அவர் ஆட்டமிழந்தார்.

மழையின் குறுக்கீட்டால் அதிரடி திருப்பம்..! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா..!

தொடர்ந்து இந்திய அணி 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தடைப்பட்டதால் போட்டி தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. நீண்ட நேரம் போட்டி பாதிக்கப்பட்டதால் மழை நின்ற பின் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டி.எல்.எஸ். விதிப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 35 ஓவர்களில் 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப், கைல் மேயெர்ஸ் களமிறங்கினர். கைல் மேயெர்ஸ் மற்றும் ப்ரூக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் சிராஜ் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய பிராண்டன் கிங் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். மறுபுறம் ஷாய் ஹோப் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 74 ரன்னாக இருந்த போது பிராண்டன் கிங் 42 ரன்களில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெளியேறினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் சாஹல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால், 119 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது.

Chella

Next Post

நீட் நுழைவுத் தேர்வுக்கான உத்தேச விடைகளை நாளை வெளியிடுகிறது தேசிய தேர்வு முகமை..!

Thu Jul 28 , 2022
நீட் தேர்வுக்கான உத்தேச விடைகளை தேசிய தேர்வு முகமை நாளை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த தேர்வினை நாடு முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். தேர்வர்கள் உத்தேச விடைகளை பெற வேண்டுமானால் தேசிய தேர்வு முகமை இணையதளத்தை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. […]

You May Like