fbpx

கோலாகலமாக தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்..! இலங்கை-ஆப்கானிஸ்தான் மோதல்..!

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இன்று (சனிக்கிழமை) தொடங்கி செப்.11ஆம் தேதி வரை நடக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஒரு முன்னோட்டமாக ஆசிய கோப்பை தொடர் விளங்குகிறது. இதில், பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறும். இதில் முதல் இரு இடத்தை பிடிக்கும் அணி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

கோலாகலமாக தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்..! இலங்கை-ஆப்கானிஸ்தான் மோதல்..!

இந்நிலையில், துபாயில் இன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இலங்கை அணி தசன்ஷனக தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆப்கானிஸ்தான் அணி போட்டியின் தினத்தில் எந்த ஒரு அணியையும் வீழ்த்தும் திறனைக் கொண்டுள்ளது. எனவே, வெற்றியுடன் கணக்கை தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Chella

Next Post

பம்பர் வேலைவாய்ப்பு.. DRDO-ல் 1901 காலியிடங்கள்.. முழு விவரம் உள்ளே..

Sat Aug 27 , 2022
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO 1901 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இதில் மூத்த தொழில்நுட்ப உதவியாளர்-B (STA-B) மற்றும் டெக்னீசியன்-A (Tech-A) உள்ளிட்ட பல்வேறு காலியிடங்கள் உள்ளன. செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் செப்டம்பர் 23 வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் drdo.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பள விவரங்கள் மூத்த தொழில்நுட்ப உதவியாளர்- பி: ரூ 35,400 மற்றும் […]

You May Like