fbpx

மீண்டும் அணிக்கு திரும்பும் பும்ரா..? மீண்டெழுமா இந்திய அணி..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் இந்திய அணியில் விளையாடாமல் இருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா, முழு உடல் தகுதியடைந்து தற்போது மீண்டும் அணிக்கு திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பும்ரா அணியில் இடம்பெறாமல் இருந்ததால் டெத் ஓவர்களில் மற்ற பவுலர்கள் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். ஆசியக் கோப்பையிலிருந்து கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிவரை பந்துவீச்சு சரியில்லாமல் போனதாலேயே இந்தியா படுதோல்விகளை சந்தித்து வருகிறது. அதனால், அணியில் பும்ரா எங்கே என்ற கேள்வியை ரசிகர்கள் அனைவரும் எழுப்பினர்.

மீண்டும் அணிக்கு திரும்பும் பும்ரா..!! மீண்டெழுமா இந்திய அணி..? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

இந்நிலையில், இன்று நடைபெற உள்ள ஆஸ்திரேலியா உடனான இரண்டாவது டி20 ஆட்டத்தில் பும்ரா கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காயம் காரணமாக விலகிய அவர் தற்போது முழுவீச்சில் பந்து வீசுவதாகவும், முழு உடல் தகுதியை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் போட்டியில் பும்ரா இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக, ரன்களை கட்டுப்படுத்துவதிலும், விக்கெட்டை வீழ்த்துவதிலும் இந்தியா திணறியது. தற்போது நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா பங்குபெற இருப்பது அணிக்கு பெரிய பலமாக அமையவிருக்கிறது.

Chella

Next Post

#Covid-19: கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...? மத்திய சுகாதாரத்துறை அறிக்கை...!

Fri Sep 23 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,383 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 20 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,291 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
மக்களே..!! கொரோனா அறிகுறி இருந்தால் இனி என்ன நடக்கும் தெரியுமா..? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

You May Like