இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று, தற்போது வைரலாகி விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
அவர் பகிர்ந்த வீடியோவில், கிரிக்கெட் பேட்டின் கைப்பிடியை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று செய்து காண்பிக்கிறார். சோப் மற்றும் தண்ணீரால், அவர் சுத்தம் செய்து காட்டும் போது, பைப்பை திறந்து விட்டுக்கொண்டே வீடியோவில் பேசிக்கொண்டு இருக்கிறார். மேலும் இந்த முறையை யாரும் அவருக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை என்றும் இது அவரது ‘ஸ்பெஷல் வழிமுறை’ என்றும் கூறியிருக்கிறார். இந்நிலையில், இந்த வீடியோவிற்கு கீழே, ”தயவுசெய்து தண்ணீரைச் சேமியுங்கள் சச்சின்” என்று கருத்து தெவித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். மேலும் ‘அவர் மற்றவர்களுக்கு சொன்னதை அவரே செய்யவில்லை’ என்றும் விமர்சித்து வருகிறார்கள்.

காரணம், 2017ஆம் ஆண்டு ஹோலி பண்டிகையின் போது, அவர் பகிர்ந்த ஒரு ட்வீட்டில், ’வண்ணங்களைப் பூசி மகிழ்வதோடு, அந்த வண்ணத்தை உடலில் இருந்து நீக்குவதற்காக ஏராளமான நீரைச் செலவு செய்ய வேண்டி இருக்கும். அதனால், ‘அளவோடு வண்ணத்தைப் பூசி மகிழுங்கள்..! அதேசமயம் நீரையும் சேமியுங்கள்’ என்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சினின் வீடியோ காண… https://www.instagram.com/reel/CicuzjTAeFW/?utm_source=ig_web_button_share_sheet