fbpx

செஸ் ஒலிம்பியாட் அரங்கில் சலசலப்பு..! கடிகாரத்தால் ஏற்பட்ட சிக்கல்..!

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5-வது சுற்றில் நெதர்லாந்து அணியும் கனடா அணியும் மோதின.

உலகின் தலை சிறந்த வீரரான நெதர்லாந்தின் அனிஷ் கிரியை எதிர்த்து கனடாவின் எரிக் ஹான்சன் விளையாடினார். இந்த ஒலிம்பியாட் தொடரை பொறுத்தவரை முதல் 90 நிமிடங்களில் வீரர்கள் 40 நகர்தல்கள் மேற்கொள்ள வேண்டும். அப்படி 40 நகர்தலுக்கு முன்னரே ஒரு வீரருக்கு வழங்கப்பட்ட 90 நிமிடங்கள் நிறைவடைந்தால், அந்த வீரர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படுவார். 90 நிமிடங்களுக்குள் 40 நகர்தல்களை வீரர் மேற்கொண்டால் அந்த வீரருக்கு கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்படும்.

இப்படி இருக்கையில் நேற்று நடந்த போட்டியில் அனிஷ் கிரிக்கு எதிரான போட்டியில், கனடா வீரர் எரிக் ஹான்சன் தன்னுடைய 40-வது நகர்வை 90 நிமிடங்களுக்கு பிறகு அழுத்த கடிகாரம் 30.28 என நேரம் காட்டியது. அதனால், உடனடியாக போட்டியின் நடுவர் போட்டியை நிறுத்திவிட்டு அணிஷ் கிரி வெற்றி பெற்றதாக அறிவித்தார். இருந்தாலும் இரண்டு வீரர்களுக்கும் இதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால், செஸ் ஒலிம்பியாட் தொடரின் துணை தலைமை நடுவர் கோபகுமாரன் சுதாகரன் போட்டியின் இடையே சம்பவ இடத்திற்கு வந்து இதுகுறித்து விளக்கமளித்தார். இதனால், ஒலிம்பியாட் அரங்கில் 15 நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது.

Chella

Next Post

தங்கம் விலை இன்று அதிரடி குறைவு.. மகிழ்ச்சியில் பெண்கள்...

Wed Aug 3 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.38,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது…. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]
#Gold Rate..!! தங்கம் விலை அதிரடி உயர்வு..!! இந்த விலைக்கு வாங்கலாமா? வேண்டாமா?

You May Like