fbpx

செஸ் ஒலிம்பியாட்..! உலக சாம்பியன் விஸ்வநாதனை கேள்விகளால் திணற வைத்த 8 வயது சிறுமி..!

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திடம் 8 வயது இரட்டை சிறுமிகள் கேட்ட கேள்வியால் அவர் திகைத்து போனார்.

மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கலை கட்டி வருகிறது. மூன்று சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டியில் இடையிடையே விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்களுடன் கேள்வி நேரத்தில் பங்கேற்கும் வாய்ப்பானது கிடைக்கும். அந்த வகையில், நேற்று ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்திடம் 8 வயது ஆன இரட்டை சிறுமிகள் கேள்வி ஒன்றை எழுப்பினர். தற்போது அந்த கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.

செஸ் ஒலிம்பியாட்..! உலக சாம்பியன் விஸ்வநாதனை கேள்விகளால் திணற வைத்த 8 வயது சிறுமி..!

கேள்வி நேரத்தின் போது, இரட்டை சிறுமிகளில் ஒருவர் காயின்களை எப்படி மறுபடியும் Reset செய்வது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆனந்த் பதிலளிக்க தொடங்கிய போது, அந்த சிறுமி காயின்களை வைத்து எதிரணி வீரரை திசை திருப்புவது எப்படி? என்று கேள்வி எழுப்பினார். சிறுமியின் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ‘I Have No Idea’ என்று கூறி மகிழ்ச்சி சிரிப்பை ஆனந்த் வெளிப்படுத்தினார். மேலும், இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், இன்றைய தினத்திற்கான கேள்வி என்றும் பதிவிட்டுள்ளார். உலக சாம்பியனையே தங்களுடைய கேள்விகளால் திணற வைத்த இந்த இரட்டை சிறுமிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றனர்.

Chella

Next Post

ஆக.3ஆம் தேதி அமைச்சரவை மாற்றம்..! மாவட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு..! வெளியான முக்கிய அறிவிப்பு..!

Mon Aug 1 , 2022
மேற்குவங்க மாநிலத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி அமைச்சரவை மாற்றப்படும் எனவும், மாவட்டங்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரிக்கப்படும் எனவும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநில தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியை ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, அவரது அமைச்சர் பதவியை முதல்வர் மம்தா பானர்ஜி பறித்தார். இந்நிலையில், கோல்கட்டாவில், மம்தா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், […]
ஆக.3ஆம் தேதி அமைச்சரவை மாற்றம்..! மாவட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு..! வெளியான முக்கிய அறிவிப்பு..!

You May Like