ரவீந்திர ஜடேஜா முன்பு குத்தாட்டம் போட்டு ஆடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் ஷிகர் தவான் பகிர்ந்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா இடம்பெறவில்லை. அதேபோல், ஷிகர் தவானும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இல்லை. தற்போது, ரவீந்திர ஜடேஜா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி பெற முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில், ரவீந்திர ஜடேஜா முன்பு குத்தாட்டம் போட்டு ஆடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் ஷிகர் தவான் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஜடேஜா காயத்தால் சிகிச்சை பெற்றபடி உட்கார்ந்திருக்க, அவர் முன்பு ஷிகர் தவான் குத்தாட்டம் போடுகிறார். அதற்கு ஜடேஜா, ”அவனுக்கு திருமணம் செய்து வையுங்கள். அப்போதுதான் அவனுக்கு பொறுப்பு வரும்” என்ற இந்தி சினிமா வசனத்தை ஓடவிட்டு டப் செய்து பேசுகிறார். வேடிக்கையாக உருவாக்கப்பட்ட இந்த வீடியோ இணையவாசிகளால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது. ஷிகர் தவான் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். ஏதாவது ஒரு விளையாட்டுத்தனமான விஷயத்தை செய்து அதனை வீடியோவாக இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் தவான்.
வீடியோவை காண… https://www.instagram.com/reel/Ci4UMdsJvXy/?utm_source=ig_web_button_share_sheet