fbpx

தேசியக் கொடியை அவமதித்தாரா பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா..? வைரலாகும் சர்ச்சை வீடியோ..!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கையில் தேசியக் கொடியை ஏற்க மறுத்த வீடியோ சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. இதன் மூலம், கடந்த ஆண்டு டி20 உலக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த வெற்றியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். மேலும், இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தேசியக் கொடியை அவமதித்தாரா பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா..? வைரலாகும் சர்ச்சை வீடியோ..!

இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது கையில் தேசியக் கொடியை ஏந்த மறுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிசிசிஐ செயலாளரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய் ஷா போட்டியை காண மைதானத்திற்கு நேரில் வந்திருந்தார். நேற்று போட்டி முடிந்த பின்பு இந்திய ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் மிதந்தனர். அதேபோல் ஜெய் ஷாவும் உற்சாகமாக கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது அருகில் இருக்கும் நபர் ஜெய் ஷாவிடம் இந்திய தேசியக் கொடியை கொடுக்கிறார், ஆனால் அவர் அதனை வாங்க மறுக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேசியக் கொடியை அவமதித்தாரா பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா..? வைரலாகும் சர்ச்சை வீடியோ..!

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் ஒருவர், “இதுவே பாஜகவை சாராத நபர் ஒருவர் தேசியக் கொடியை ஏந்த மறுத்திருந்தால் பாஜகவினர் சம்பந்தப்பட்ட நபரை தேச விரோதி என்று முத்திரை குத்தியிருப்பார்கள். அதிர்ஷ்டவசமாக அது அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா ஆகிவிட்டார்” என்று கிண்டல் தொணியில் பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய விஜய் சேதுபதி.. ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க இவ்வளவு சம்பளமா..?

Mon Aug 29 , 2022
இயக்குனர் அட்லி தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார் என்பது நம் அனைவரும் அறிந்தது தான்.. இந்த படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா ஜோடி சேர உள்ளார்.. இப்படத்திற்கு ஜவான் என்று பெயரிடப்பட்டுள்ளது.. அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.. ஏற்கனவே […]

You May Like