fbpx

”ஐபிஎல் ஏலத்தில கூட இவ்வளவு விலைக்கு போகல”..!! TNPL-இல் அதிக விலைக்குப் போன சென்னை வீரர்..!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7-வது சீசன், இந்தாண்டு நடைபெறவுள்ளது. இந்த தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஏலம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. முதல் வீரராக ஏலம் விடப்பட்ட விஜய் சங்கரை ரூ.10.25 லட்சத்திற்கு திருப்பூர் அணி வாங்கியது. அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சாய் சுதர்சனை திண்டுக்கல் டிராகன்ஸுடன் போட்டி போட்டு ரூ.21.6 லட்சம் கொடுத்து லைகா கோவை கிங்ஸ் அணி வாங்கியது. இதன்மூலம், தமிழ்நாடு பிரீமியர் லீக் வரலாற்று உச்சபட்ச தொகைக்கு விலைபோன வீரர் என்ற சாதனையை சாய் சுதர்சன் படைத்துள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில்கூட, குஜராத் டைட்டன்ஸ் அணியால் அவர் ரூ.20 லட்சத்திற்குத்தான் ஏலம் எடுக்கப்பட்டார். உள்நாட்டு கிரிக்கெட்டில் ரஞ்சி, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி என 3 விதமான ஃபார்மட்டிலும் அபாரமாக ஆடி தமிழ்நாடு அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருபவர் சாய் சுதர்சன். ஐபிஎல்லிலும் கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக முதல்முறையாக களமிறங்கி, அறிமுக சீசனில் கோப்பையை வென்று தர உதவினார்.

இவரை, ரூ.17.6 லட்சம் தொகைக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வாங்கியுள்ளது. இவருக்கு அடுத்து, வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவை ரூ.15.2 லட்சத்திற்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. தொடர்ந்து சந்தீப் வாரியரை ரூ.8.25 லட்சத்துக்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தரை ரூ.6.75 லட்சத்திற்கு மதுரை பாந்தர்ஸ் அணியும், வருண் சக்கரவர்த்தியை அதே தொகைக்கு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், நடராஜனை ரூ.6.25 லட்சத்திற்கு ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வாங்கியுள்ளன.

Chella

Next Post

ChatGPT பயனர்களே ஜாக்கிரதை.. போலி செயலி மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள், பாஸ்வேர்டு திருடப்படலாம்...

Fri Feb 24 , 2023
ChatGPT என்பது செயற்கை நுண்ணறிவு மென்பொருளாகும்.. சமீபகாலமாக இந்த ChatGPT உலகளவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.. நாம் கூகுளில் ஒரு விஷயத்தை பற்றி தேடினால், அதை பற்றி பல்வேறு ஆப்ஷன்கள் நமக்கு கிடைக்கும்.. ஆனால் இந்த ChatGPT மூலம் தேடினால், நாம் என்ன தேடுகிறோமோ அதை பற்றிய விவரங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ந்து, நமக்கு தேவையான சரியான விவரத்தை மட்டுமே வழங்கும்.. மேலும் ChatGPT-யின் சுவாரஸ்யமான பதில்கள் பலரையும் […]

You May Like